தினமும் இந்த நட்ஸ் சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்க உதவுமாம்: உங்களுக்குத் தெரியுமா?
தினமும் பாதாம் சாப்பிட்டால் உடல் எடையைக் குறைக்கலாம் என்கிறது ஆய்வு ஒன்று!
தினமும் 30 முதல் 50 கிராம் பாதாம் சாப்பிடுவது எடையைக் குறைக்க உதவும் .
அதாவது, தினமும் 30 முதல் 50 கிராம் பாதாம் சாப்பிடுவதால் பசி குறையுமாம்.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், மாவுச்சத்து அடங்கிய ஸ்னாக்ஸ் சாப்பிடுவதற்கு பதிலாக பாதாம் சாப்பிட்டவர்கள், சீக்கிரத்தில் பசி எடுக்காததால் அடுத்த வேளை உணவை கொஞ்சமாக சாப்பிட்டார்களாம்.
ஆக, பாதாம் சாப்பிடுவதால், ஒருவர் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவு குறைவதால், உடல் எடை குறைப்பில் பாதாம் உதவும் என்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து, நீண்ட கால எடை பராமரிப்பு விடயத்தில் பாதாமை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்களாம்.