வானிலை குறித்து தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலின் போது ஏற்பட்டுள்ள எதிர்பாராத காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அனர்த்த நிலைமைகள் அல்லது அவசர நிலைகள் குறித்து கவலைகள் உள்ள மாவட்டங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாளை (20) முதல் மூன்று மணித்தியாலங்களுக்கு ஒருமுறை வளிமண்டலவியல் திணைக்களத்திடம் இருந்து வானிலை அறிக்கையை பெற்றுக்கொள்ளும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இயற்கை அனர்த்தங்களினால் ஜனாதிபதித் தேர்தலுக்கு இடையூறுகள் ஏற்படுமாயின் அதனை நிவர்த்தி செய்வதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு இணைந்து விசேட கூட்டு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளன.
அதன்படி இன்று முதல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி வரை இந்த வேலைத்திட்டத்தை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |