திருட்டுத் தனமாக காருக்கு சார்ஜ் போட்ட நபர்: அபராதத்தைக் கட்ட சொன்ன அரசாங்கம்!
அவுஸ்திரேலியா நாட்டில் பொது மின்சாரத்தைப் பயன்படுத்தி தனது மின்சார வாகனத்திற்கு டாப் அப் செய்த நபரை அந்நாட்டுக் காவல்துறை கைது செய்து அபராதம் விதித்துள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.
பொது மின்சார திருட்டு
அவுஸ்திரேலியாவின் தெற்கு பெர்க் மாகாணத்தைச் சேர்ந்த பார்கர் எனும் நகரத்தில், அரசாங்கத்தின் மின்சாரப் பெட்டியிலிருந்து மின்சாரத்தைத் திருட்டுத் தனமாக எடுத்து, தனது வாகனத்துக்கு சார்ஜ் போட்டதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.78 வயதான அந்த நபர் காருக்கு சார்ஜ் போடுவதை சிசிடீவி கேமராவில் பார்த்த, பெர்க் மாகாணத்தின் காவல் துறை அவரை கைது செய்துள்ளது.
திருட்டுக்கு அபராதம்
பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உள்ள மின்சாரத்தை எடுத்து அவரது காருக்கு சார்ஜ் போட்டுள்ளார்.அதனால் அவருக்கு காவல்துறை 500 டாலர் அபராதம் விதித்துள்ளது.மேலும் அவர் சார்ஜ் போடும் போது பதிவான சிசிடிவி போட்டாவை பெர்க் மாகாண காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து “காருக்கு சார்ஜ் போடுவதென்றால் சார்ஜர் பேங்குகளில் போடுங்கள். பொதுமக்கள் உபயோகப்படுத்தும் மின்சாரத்தைப் பயன்படுத்தாதீர்கள்” எனப் பதிவிட்டுள்ளது.
@infrastructuremagazine
இந்த ட்விட்டர் பதிவிற்குப் பலரும் தங்களது கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.சிலர் கிராமங்களில் மின்சார கார் பயன்படுத்துவதில் இது தான் சிக்கல் என்றும், நாட்டில் அதிகப்படியான பவர் பேங்குகள் இல்லாததே இதற்கான காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ளனர்.