2027ல் ரூ.627 கோடி இழப்பை எதிர்கொள்ள உள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
ecb to face rs.627crores loss in 2027: 2027 ஆம் ஆண்டில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ரூ.627 கோடி இழப்பை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.627 கோடி இழப்பு
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்(ECB) 2025 ஆம் ஆண்டில், 12.6 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.158 கோடி) லாபத்தைப் பதிவு செய்திருந்தது.

ஆனால், 2027 ஆம் ஆண்டில் 50 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.627 கோடி) இழப்பை சந்திக்கும் நிலையில் உள்ளது.
அதை, 35 மில்லியன் பவுண்டுக்குள்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.466 கோடி) கட்டுப்படுத்த முயற்சிக்கிறது.
இந்தியா உடனான தொடர் இல்லாதது, ஐசிசி வருவாய் நிறுத்தம் ஆகிய 2 விடயங்களும், இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்துக்கு பெரும் தொலைக்காட்சி மற்றும் விளம்பரதாரர் வருமானத்தை ஈட்டித் தரும் இந்தியாவின் தொடர் இல்லாததால், அதன் வருமானம் கடுமையாகக் குறைகிறது.

2028 ஆம் ஆண்டில் தொடங்கும் அடுத்த சுழற்சியில் தொலைக்காட்சி ஒப்பந்தம் பலவீனமாக இருக்கும் என்று ஐசிசி எதிர்பார்ப்பதால், சிறிதளவு பணத்தை ஒதுக்கி வைத்து, எதிர்காலத்தில் கொடுப்பனவுகளில் ஏற்படும் கடுமையான சரிவைத் தடுக்க திட்டமிடுகிறது.
இதன் காரணமாக, 2027 ஆம் ஆண்டில் 12 முழு உறுப்பினர் வாரியங்கள் ஒவ்வொன்றிற்கும் விநியோகிக்கப்படவிருந்த நிதியில் ஒரு பகுதியை நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளது.
உலகக் கிண்ணம் நடைபெறும் ஆண்டில், நாடுகளின் வாரியங்கள் பொதுவாக ஒரு பெரிய தொகையை எதிர்பார்க்கின்றன. 2027 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள ஐசிசி உலகக் கிண்ணமும் இதில் அடங்கும்.
அதேவேளையில், பாதிப்பைக் குறைப்பதற்காக, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (ECB) ஐசிசியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஏற்கனவே 18 கவுண்டி அணிகளில் 10 அணிகள் நஷ்டத்தில் இயங்கி வருவதால், அவை ECB நிதியை சார்ந்துள்ள நிலையில், தற்போது ECBயே வருமான இழப்பை எதிர்கொள்ள உள்ளது இங்கிலாந்து கிரிக்கெட்டிற்கு 2027 ஆம் ஆண்டு கடினமான காலமாக அமைய உள்ளது.