பிரான்சில் இந்த பகுதிகளுக்கெல்லாம் செல்வதை தவிர்ப்பது நல்லது: வெளியாகியுள்ள சமீபத்திய தகவல்
பிரான்சின் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு, ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அமைப்பு மக்களை வலியுறுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் கொரோனா பரவல் தொடர்பில் வெளியாகியுள்ள சமீபத்திய தகவல் ஒன்றின்படி, ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அமைப்பு, பிரான்சின் பல பகுதிகளை அடர் சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.
அந்த பகுதிகளாவன:
Midi-Pyrénées
Languedoc-Roussillon
Provence-Alpes-Côte d’Azur ஆகியவையாகும்.
நேற்று வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின் போருள் என்னவென்றால், பிரான்சின் இந்த பகுதிகளுக்கும், இந்த பகுதிகளிலிருந்தும் பயணிப்பதை கூடுமானவரை தவிர்க்கவேண்டும் என்பதாகும்.
என்றாலும், அத்தியாவசிய பயணத்துக்கு அனுமதியளிக்கப்படவேண்டும் என்று கூறியுள்ள ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அமைப்பு, அப்படி அனுமதிக்கப்படுவோர் கட்டுப்பாடுகளை பின்பற்றி, கவனமாக செயல்படுவது அவசியம் என்றும் கூறியுள்ளது.
இந்த மூன்று பகுதிகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும், அந்த பகுதிகளுக்கு தங்கள் நாட்டு மக்கள் செல்லலாமா இல்லையா என்பதை முடிவு செய்யும் பொறுப்பு அந்தந்த நாடுகள்வசம்தான் உள்ளது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.