சுவிட்சர்லாந்து விரைவாக பொருளாதார பிரச்சினைகளிலிருந்து மீளும்: பொருளாதார வல்லுநர்
கொரோனாவால் உருவான பொருளாதார பிரச்சினைகளிலிருந்து சுவிட்சர்லாந்து விரைவாக மீளும் என பொருளாதார வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பல ஐரோப்பிய நாடுகளைவிட சுவிட்சர்லாந்து சீக்கிரத்திலேயே பொருளாதார பிரச்சினைகளிலிருந்து விடுபட்டுவிடும், இந்த கோடை முடியும் நேரத்திலேயே சுவிட்சர்லாந்து சகஜ நிலைக்குத் திரும்ப வாய்ப்புள்ளது என்கிறார் பொருளாதார நிபுணரான Jan-Egbert Sturm.
இதற்கு முன் நீண்ட காலமாக இருந்ததைக் காட்டிலும் நிறுவனங்கள் இப்போது பாஸிட்டிவாக உணர்வதாகவும், கொரோனா காலகட்டத்தின்போது அதை எப்படி சமாளிப்பது என பொருளாதாரம் கற்றறிந்துகொண்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
நாடு கட்டுப்பாடுகள் நெகிழ்த்தலை நோக்கிச் செல்வது நல்ல செய்தி என்று
கூறியுள்ள அவர், நுகர்வோர் விரைவாக பொருளாதாரம் மீட்கப்பட உதவுவார்கள்
என்கிறார்.
வலிமையான தடுப்பூசித் திட்டம் மகிழ்ச்சியான உணர்வை அதிகரிக்கச்
செய்துள்ளதாகவும், பொருளாதாரம் தொடர்ந்து வலுப்பெற அது அத்தியாவசியமானது
என்றும் தெரிவித்துள்ளார் பொருளாதார நிபுணரான Jan-Egbert Sturm.