ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமத்தின் ரூ.510 கோடி சொத்துகள் மேலும் முடக்கம்

Reliance India Enforcement Directorate Anil Ambani
By Ragavan Nov 03, 2026 03:42 PM GMT
Report

ED Attaches Rs 510 Cr More Assets of Anil Ambani: ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமத்தின் ரூ.510 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

மேலும் ரூ.510 கோடி சொத்துகள் முடக்கம்

அமலாக்கத்துறை (ED) அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம் தொடர்பான பணமோசடி மற்றும் வங்கி மோசடி விசாரணையில் மேலும் ரூ.510 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளது.

இதன் மூலம் இதுவரை இந்த வழக்குகளில் முடக்கப்பட்ட மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.23,100 கோடியை எட்டியுள்ளது.

ED-Attaches-Rs-510-Cr-More-Assets-of-Anil-Ambani

முடக்கப்பட்டுள்ள சொத்துகள்

அமலாக்கத்துறை வெளியிட்ட தகவலின்படி, இந்த புதிய நடவடிக்கையில் விமானங்கள், வங்கி கணக்குகள், நிரந்தர வைப்புத் தொகைகள், அசையா சொத்துகள், முதலீடுகள் மற்றும் வரவேண்டிய தொகைகள் உள்ளிட்ட பல சொத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதில், Reliance Home Finance Limited (RHFL) மற்றும் Reliance Commercial Finance Limited (RCFL) தொடர்பான வங்கி மோசடி வழக்கில் ரூ.263.05 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

பிரித்தானியாவில் நிரந்தர வதிவிடத்திற்காக காத்திருப்பு காலம் இரட்டிப்பு

பிரித்தானியாவில் நிரந்தர வதிவிடத்திற்காக காத்திருப்பு காலம் இரட்டிப்பு

அதேபோல் Reliance Communications Limited (RCOM) தொடர்பான வழக்கில் ரூ.247.12 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. RCOM வழக்கில் இரண்டு சார்ட்டர்ட் விமானங்கள், மகாராஷ்டிராவில் உள்ள ஆறு நிலப்பகுதிகள் மற்றும் அலுவலக வளாகம் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன.

RHFL மற்றும் RCFL வழக்குகளில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள இரண்டு காற்றாலை மின் உற்பத்தி இயந்திரங்கள், வங்கி இருப்புத் தொகைகள், நிரந்தர வைப்புகள் மற்றும் முதலீடுகள் முடக்கப்பட்டுள்ளன.

ED-Attaches-Rs-510-Cr-More-Assets-of-Anil-Ambani

இந்த விசாரணை, CBI, டெல்லி மற்றும் மும்பை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை பதிவு செய்த பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் தொடங்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மேலும், அந்நிய செலாவணி மேலாண்மை சட்டமான FEMA கீழும் தனித்தனி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ரூ.53,866 கோடியில் இந்திய கடற்படைக்கு 8 புதிய போர்க்கப்பல்கள் - பாதுகாப்புத் துறை மெகா ஒப்பந்தம்

ரூ.53,866 கோடியில் இந்திய கடற்படைக்கு 8 புதிய போர்க்கப்பல்கள் - பாதுகாப்புத் துறை மெகா ஒப்பந்தம்

10 பேர் கைது

விசாரணையில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட நிதி தவறாக மாற்றப்பட்டதாகவும், நிறுவனச் சொத்துகள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டதாகவும், சில நிதிகள் வெளிநாட்டு வரிச் சலுகை மையங்களுக்கு மாற்றப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

இந்த வழக்குகள் தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ஆறு வழக்குகளும், FEMA சட்டத்தின் கீழ் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.    

உணவு ஏற்றுமதி தடைகளை நீக்க பிரித்தானியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே புதிய ஒப்பந்தம்

உணவு ஏற்றுமதி தடைகளை நீக்க பிரித்தானியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே புதிய ஒப்பந்தம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US