ரூ.50 கோடிக்கு நாய் வாங்கிய தொழிலதிபர் வீட்டில் ED ரெய்டு.., வெளிவந்த அதிர்ச்சி உண்மை
உலகின் மிக விலையுயர்ந்த நாயை நபர் ஒருவர் ரூ.50 கோடிக்கு வாங்கியுள்ள நிலையில் அவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
அமலாக்கத்துறை சோதனை
பெங்களூருவைச் சேர்ந்த நாய் வளர்ப்பாளர் ஒருவர் அரிய வகை ஓநாய் நாயை வாங்க 50 கோடி ரூபாய் செலவிட்டுள்ளார். இதன் மூலம் அது உலகின் மிகவும் விலையுயர்ந்த இனமாக மாறியுள்ளது.
இது ஓநாய் மற்றும் காகசியன் ஷெப்பர்ட் இனத்திற்கு இடையிலான கலப்பினமாகும். இந்த தனித்துவமான விடயத்தினால், செல்லப்பிராணி வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவரான சதீஷ், இந்த அசாதாரண இனத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவதை தனது குறிக்கோளாகக் கொண்டுள்ளார்.
இவர் சில தினங்களுக்கு முன்பு உலகின் விலையுயர்ந்த நாயான Wolf Dog விற்பனைக்கு வந்தது. இதனை இவர் ரூ.50 கோடிக்கும் மேல் பணம் கொடுத்து வாங்கியுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்ததால் சதீஷ் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவர் காகசியன் ஷெப்பர்டு இன நாய் வாங்கியதற்கான எந்த ஆவணங்களும் அதிகாரிகளுக்கு சிக்கவில்லை.
இதன் மூலம் ரூ.50 கோடி கொடுத்து நாய் வாங்கியதாக வந்த தகவல் பொய் என்று தெரியவந்துள்ளது. இதனடிப்படையில் அவரிடம் அதிகாரிகள் விசாரணை செய்யவுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |