பெரும் வெற்றியை நோக்கி பயணிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி! சொந்த தொகுதியில் அபார முன்னிலை
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும் வாக்கு வித்தியாசத்தில் எடப்பாடி தொகுதியில் முன்னிலை பெற்று வருகிறார்.
தமிழக தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் அதிமுக சார்பில் களம் காண்கிறார்.
அவரை எதிர்த்து திமுகவின் சம்பத்குமார் போட்டியிட்டுள்ளார். அங்கு தற்போதைய நிலவரப்படி 19000க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலை வகிக்கிறார்.
இதன்மூலம் அவர் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.