கொலை தான் இந்த ஆட்சியில் பதிலா? முதலைமைச்சர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
சென்னையில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதலைமைச்சர் விஜயை நோக்கி கேள்வி
சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட விஷ்ணு (23) என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைக் குறிப்பிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "போதைப்பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்டால் கொலை தான் இந்த ஆட்சியில் பதிலா? இது தான் மாற்றமா?" என முதலமைச்சரை விஜயை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் தன் மீது வீண் பழி போடுவதாக ஆதங்கத்துடன் குறிப்பிட்ட முதலமைச்சர் அதிகாரிகளை நியமித்துவிட்டதாக கூறுகிறார். நியமித்தால் போதுமா? இதே அதிகாரிகள் தானே எல்லா ஆட்சியிலும் பணிபுரிகிறார்கள்? மாற்றம் என்பது ஆட்சியாளரிடம் வர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், "ஆட்சி நடத்துவது எப்படி" என நீங்கள் ஆறு மாத Crash Course முடிப்பதற்குள் மக்கள் மடிந்துக் கொண்டே இருக்க வேண்டுமா? அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாதா?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |