12ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, மே 8ஆம் தேதி அதாவது இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவு..,
+2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவர்கள், உயர்கல்விக்கான விருப்பமிக்க, மற்றும் சரியான திசையைத் தேர்ந்தெடுத்து, வாழ்வின் அனைத்து படிகளிலும் சிறக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
தேர்ச்சி பெறத் தவறியவர்கள் துவண்டுவிட வேண்டாம்.
You haven't failed;
Your success is just postponed for a while,
மீண்டும் நன்றாகப் புரிந்து படித்து,
துணைத் தேர்வை அணுகுங்கள்;
நிச்சயம் தேர்ச்சி அடைவீர்கள்!
நீங்கள் ஒவ்வொருவரும் வெற்றியாளர்கள் தான்!
உங்களுக்கும் எனது Advance வாழ்த்துகள்! என்று கூறியுள்ளார்.
+2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவர்கள், உயர்கல்விக்கான விருப்பமிக்க, மற்றும் சரியான திசையைத் தேர்ந்தெடுத்து, வாழ்வின் அனைத்து படிகளிலும் சிறக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) May 8, 2025
தேர்ச்சி பெறத் தவறியவர்கள்
துவண்டுவிட வேண்டாம்.
You haven't failed;… pic.twitter.com/UQShVfvYNS
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |