பிரித்தானிய ராஜ குடும்பத்தை மோசமாக விமர்சித்த பிரதமரின் மனைவி... வெடிக்கவிருக்கும் சர்ச்சை
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் மனைவி, ராஜ குடும்பத்தினரை மோசமாக விமர்சித்தது தொடர்பான ஒரு கட்டுரை வெளியாகவிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
Lara Prendergast என்ற பத்திரிகையாளர், போரிஸ் ஜான்சனின் மனைவியான கேரியைக் குறித்து எழுதியுள்ள ஒரு கட்டுரை அமெரிக்கப் பத்திரிகை ஒன்றில் வெளியாகவுள்ளதாம்.
இந்த Lara Prendergast, கேரியின் தூண்டுதலின் பேரில் பிரதமர் இல்லத்திலிருந்து ராஜினாமா செய்யும் நிலைக்கு ஆளான Dominic Cummingsஇன் மனைவியான Mary Wakefieldஇன் ஆதரவாளர் ஆவார். ஆக, சரியான நேரத்தில் கேரி பழிவாங்கப்படுகிறாரோ என தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை.
சரி, விடயத்துக்கு வருவோம்...
Lara தன் கட்டுரையில் கேரியைக் குறித்து என்னென்ன விடயங்கள் எழுதியுள்ளார்?
கேரி முன்பு ராஜ குடும்பத்தைக் குறித்து மோசமாக விமர்சித்துள்ளாராம். கேரியின் தோழிகளைத் தொடர்புகொண்ட Lara, அவர்களிடம், கேரி மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்களைக் குறித்து என்னவெல்லாம் சொன்னார் என்பது குறித்து விசாரித்திருக்கிறார்.
அப்போது கேரியின் தோழிகள், கேரி கூறிய சில விடயங்களைக் கேட்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம், அவர் மனதில் என்ன நினைத்திருக்கிறார் என்றே தெரியவில்லை என்று கூறியுள்ளார்கள்.
மேலும், கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் அமுலில் இருந்த நேரத்தில், கிறிஸ்துமஸ் நேரத்தில், கேரியின் நெருங்கிய தோழிகளில் ஒருவர், விதிகளை மீறி பிரதமரின் வீட்டில் தங்கியதாகவும் அந்த கட்டுரையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாம்.
ஆக, அந்த கட்டுரை வெளியாகும்போது என்ன சர்ச்சையெல்லாம் வெடிக்கப்போகிறதோ தெரியாது!