மாணவர்களே... கல்விக்கடன் வாங்க போகிறீர்களா? முதலில் இதை கவனியுங்கள்
செல்வத்தில் கல்விச் செல்வம் போல் வேறு எந்த செல்வமும் உயர்ந்தது கிடையாது. ஒருவருக்கு கல்விச் செல்வம் இருந்துவிட்டால் அவருக்கு அனைத்து செல்வங்கள் தானாக வரும் சேரும்.
சில மாணவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பு இருக்கும், கற்பனையும் இருக்கும். கல்வி ஞானமும் இருக்கும். ஆனால், பணம் இருக்காது.
அப்படிப்பட்டவர் கல்விக் கடன் பெற்று உங்கள் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ளலாம். ஆனால், கல்விக்கடன் பெற்றால், வட்டி விகிதம், கடன் திரும்ப செலுத்தும் காலம் என பல காரணிகள் இருக்கின்றது.
சரி வாங்க... எப்படி கல்விக்கடன் விண்ணப்பிக்கலாம்? எப்படி அந்த கடனை திருப்பிச் செலுத்தலாம் என்று பார்ப்போம் -
1. சில நிதிநிறுவனங்கள் வெளிநாட்டில் படிப்பதற்கு மட்டும் கல்விக் கடனை வழங்குகிறது.
2. கல்விக் கடன்கள் சுலபமாக வாங்கினாலும், மாணவர்களுக்கு படிப்பு முடிந்த பிறகு வட்டி விகிதங்களின் சுவை அதிகரிக்கும்.
3. மாணவர்கள் தேர்வு செய்யும் பாடப்பிரிவுகளுக்கு ஏற்ற வகையில் கல்விக்கடன் மாறுபடும். ஆனால், கடன் பெற்ற மாணவர்களுக்கு கடன் மதிப்பீடு, பிணை போன்ற காரணங்கள் வட்டி விகிதங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
4. கல்விக்கடனுக்காக வங்கிகளில் மாணவர்கள் விண்ணப்பம்போது, உங்கள் CIBIL மதிப்பீட்டை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
5. ஒவ்வொரு வங்களுக்கு ஏற்றவகையில் கடன் திருப்பி கொடுக்கும் முறைகள் மாறுபடும். 1-வது வட்டியோடு பணம் செலுத்தலாம். 2-வது வட்டி இல்லாமல் அசல் மட்டும் செலுத்தலாம்
6. கடன் பெற்றால், வட்டியுடன் மாதத்தவணையாக படிப்பு முடிந்த பிறகு செலுத்தலாம்.
7. படிப்பு முடிந்த பிறகு 6 முதல் 1 வருடம் கழித்து கூட மாத் தவணையைத் செலுத்தலாம்.
8. சில வங்கிகளில் கல்விக் கடன் பெற்ற அடுத்த மாதத்திலிருந்து கூட வட்டி செலுத்த வேண்டி இருக்கும்.
9. கல்விக்கடன் பெறும் மாணவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும். ஒரு மாணவர் கல்விக் கடன் பெற்றார், அவருடைய தந்தை இந்த கடன்களுக்கான வட்டி செலுத்தி வந்தால், அவரது சம்பளத்திலிருந்து இந்த தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |