மாணவர்களுக்கு சாதகமாக கல்வி அமைச்சு எடுத்துள்ள புதிய தீர்மானம்
மாணவர்களின் புத்தகப் பையின் எடையை குறைக்க தேவையான நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் புதிய தீர்மானம்
இலங்கையின் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மாணவர்களுக்கு சாதகமாக புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளார்.
அதாவது பாடசாலைப் புத்தகப் பையின் எடையைக் குறைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
ஊவா மாகாண பாடசாலை அதிபர்கள் மத்தியில் உரையாற்றும் போதே குறிப்பிட்ட இந்த விடயத்தை இலங்கையின் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், பாடசாலைப் புத்தகங்களை 3 பாகங்களாகப் பிரித்து கற்பிப்பதன் மூலம் புத்தகப் பையின் எடையை 3இல் இரண்டாக குறைக்கலாம் என கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து அவர் கூறுகையில், தனியார் வகுப்பிற்கு அதிக பணத்தை பெற்றோர்கள் செலவழித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
எனவே கல்வியில் சில சீர்திருத்தங்கள் முன்வைக்கப்படும். அதன் பின்னர் தனியார் வகுப்புகளில் பங்கேற்பது குறையும் எனவும் அவர் சுட்டிக்காட்டி பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |