தினமும் ஒரு ஈச்சம்பழம்... இத்தனை நோய்கள் குணமாகுமா ?
ஈச்சம்பழம் என்பது இனிப்பு சுவையை தரக்கூடிய ஒரு பழமாக இருகிறது. பேரீச்சை மரத்தின் தன்மை கொண்ட ஒரு மரமாக ஈச்ச மரம் இருக்கிறது.
இந்த மரமானது இந்தியா மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விளையும்.
இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்துகள் அதிகமாக காணப்படுகிறது.
இதை தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என எடுத்துக்கொள்ளலாம். இதை சாப்பிடுவதால் உடல் ரீதியாக பல நன்மைகள் ஏற்படுகிறது.
ஆகவே இதை எவ்வாறன நேரத்தில் சாப்பிடலாம் எனவும் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றியும் இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
ஈச்சம் பழம் நன்மைகள்
மலச்சிக்கல்
மலச்சிக்கலால் அவதிபடுபவர்கள் தினமும் மூன்று வேளை உணவை சாப்பிடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு இந்த பழத்தை சாப்பிடுவது நல்லது.
எலும்புகள்
தினமும் ஈச்சம்பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் வலுவாக இருக்கும். பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
கண்கள்
அனைவருக்கும் கண் பார்வை என்பது மிக முக்கியமான ஒரு விடயமாகும். சிலருக்கு கண்பார்வை மங்குதல், மாலைக்கண் நோய் போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன. ஆகவே தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஈச்சம் பழங்களை சாப்பிட்டு வரலாம்.
இரும்புச்சத்து
நோயாளிகள், குழந்தைகள், வயதானவர்கள் என தினந்தோறும் சில ஈச்சம் பழங்களை சாப்பிட்டு வருவதால் உடலானது பலம் பெறும்.
ஆண்மை
தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் சில ஈச்சம் பழங்களை நன்கு மென்று சாப்பிட்டு, சூடான பசும்பால் குடித்தால் ஆண்மை குறைப்பாடுகள் நீங்கும்.
உடல் எடை
இயல்பான எடைக்கு குறைவான உடல் எடை கொண்டவர்கள் தினந்தோறும் பேரிச்சம் பழங்களை நன்கு அரைத்து, அதை சூடான பாலில் தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
போதை பழக்கம்
போதை பொருள் பயன்படுத்துவதற்கு பதிலாக சில ஈச்சம் பழங்களை சாப்பிட்டு வருவது நல்லது. காரணம், போதை பழக்கத்தில் இருந்து வெளியில் வர உதவும்.
வயிற்று பிரச்சனைகள்
வயிற்றில் கிருமிகள் தொற்றால் வயிற்று போக்கு ஏற்படும். அதற்கு தீர்வாக ஈச்சம் பழங்களை சாப்பிட்டு வருவது நல்லது.
புற்று நோய்
ஈச்சம் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பழக்கத்தை கொண்டவர்களுக்கு சிறுநீரக புற்று, குடல் புற்று போன்றவை குறையும்.
நீரிழிவு
ஈச்சம் பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இதை சாப்பிடும் நீரிழிவு நோயாளிகளுக்கு உடலானது பலத்துடன் இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |