ட்ரம்ப் வருகையால் எந்த மாற்றமும் இருக்காது: உலக பொருளாதார மன்றத் தலைவர் உறுதி
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்தே உலகமே அவரை சுற்றியே இயங்குவது போல ஒரு தோற்றம் உருவாகியுள்ளது.
ட்ரம்பின் வசதிக்காக, G7 உச்சி மாநாடு நடைபெறும் திகதி கூட மாற்றிவைக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஒரே ஒருவர் மட்டும், ட்ரம்புக்காக எந்த மாற்றமும் செய்யப்படாது என அறிவித்துள்ளார்!
ட்ரம்ப் வருகையால் எந்த மாற்றமும் இருக்காது
இந்த மாதம், சுவிட்சர்லாந்தின் டாவோஸில் உலக பொருளாதார மன்றக் கூட்டம் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்திலும் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப் கலந்துகொள்ள இருக்கிறார்.

Credit : AP
இந்நிலையில்தான் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார், உலக பொருளாதார மன்ற அறங்காவலர் குழுவின் இணை தலைவரான ஆண்ட்ரே ஹோஃப்மேன் (André Hoffmann).
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆண்ட்ரே, உலக பொருளாதார மன்றக் கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி கலந்துகொள்வதால் எந்த பெரிய மாற்றமும் இருக்கும் என தான் கருதவில்லை என்று கூறியுள்ளார்.

Credit : Keystone / Alessandro Della Valle
உலக பொருளாதார மன்றக் கூட்டத்தின் செயல் திட்டம் ஏற்கனவே முன்கூட்டியே தயார் செய்யப்பட்டுவிட்டது என்று கூறியுள்ள ஆண்ட்ரே, ட்ரம்பின் வருகை, அதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |