கண் ஒப்பனைப் பொருட்களால் நேரவிருக்கும் ஆபத்து: எச்சரிக்கும் வல்லுநர்கள்
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல் அன்றாட வாழ்விலும் மனிதர்கள் தம் அழகை வெளிப்படுத்த ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்து வருகின்றனர்.
குறிப்பாக பெண்கள் இவற்றைப் பயன்படுத்தி அழகு செய்வதில்
அதிகம் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
கண்களுக்கு பயன்படுத்தக்கூடிய திரவங்கள், Suspensions, Fine powder மற்றும் Glitter உள்ளிட்ட கண் அழகுசாதனப் பொருட்களானது அளவிற்கு மேல் அல்லது தவறான முறையில் பயன்படுத்துவதனால் கண்ணிற்கு அபாயம் ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது.
கண் இமை சுரப்பிகள் பிரச்சனையானது Eyeliner மற்றும் Kajal உள்ளிட்டவற்றை தவறாக பயன்படுத்துவதன் மூலம் வரக்கூடும்.
கண் இமை அழற்சிக்கும் வழிவகுக்கக்கூடும்.Mascara, Eye Shadow போன்றவையானது கார்னியல் சிராய்ப்பு, கண் நிறமி மற்றும் Keratitis போன்ற பிரச்சனைகளானது வரக்கூடும். இதனால் கண் தொற்று நோய்கள் உண்டாகக்கூடும்.
Eye lash களானது கெமிக்கல் பசைகளை பயன்படுத்தி கண்ணுடன் இணைப்பதனால் சருமத்திற்கு எரிச்சலை தரக்கூடும் அல்லது ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளானது உருவாகக்கூடும்.
Contact lens களையும் தற்போது அழகு சாதன பொருளாக பயன்படுத்தி வருகின்றனர். இது சுத்தமாக இல்லாவிட்டால் Acanthamoeba Keratitis மற்றும் கண் தொற்று போன்ற தீவிர பிரச்சனைகளை உருவாக்கக்கூடும்.
கண்களை பாதுகாக்க இதை செய்யுங்கள்
ஒப்பனை பொருட்களானது காலாவதி ஆகாதவையாக இருக்கவேண்டும். கண்களுக்கு ஒப்பனை பொருட்களை பயன்படுத்துவதற்கு முன் கண்களையும் முகத்தையும் நன்கு கழுவிக்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி நீங்கள் பயன்படுத்திக்கக்கூடிய ஒப்பனை பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது Contact lens ஐ மாற்றி பயன்படுத்துதல் அவசியம். தினமும் அதன் கரைசலை மாற்றி சுத்தம் செய்வது அவசியம். Lens உடன் தூங்கக்கூடாது அதுமட்டுமின்றி மேக்கப்பை எடுப்பதற்குமுன் lens ஐ எடுக்கவேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |