தினமும் அதிக நேரம் உடற்பயிற்சி செய்வதால் இந்த பாதிப்பு ஏற்படுமா? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
Heart attack
Health tips
Workouts
By Logeswari
உடற்பயிற்சி செய்வதால் உடலை ஃபிட்டாக வைத்து கொள்ள முடிகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கவும் உடற்பயிற்சி சிறந்த செயல் ஆற்றுகிறது.
ஆனால் எப்போது செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்து செயல்படுவது நல்லது. பலர் எப்படியாவது உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சரியான உணவை எடுத்து கொள்ளாமல் வெறும் உடற்பயிற்சி மட்டும் செய்து வருவார்கள்.
ஒரு நாளில் பாதி நேரம் உடற்பயிற்சி மட்டுமே செய்து வருகின்றனர். இதனால் பல பக்கவிளைவுகளுள் சிக்கி தவிக்கின்றனர். சரி வாங்க அதிக நேரம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து பார்க்கலாம்..
- மிகவும் கடினமான உடற்பயிற்சிகள், மராத்தான் போட்டிகளில் தொடர்ந்து ஓடுவது போன்ற செயல்களால் மாரடைப்பு, வாதம், இதயம் சீராக இயங்காமல் போவது, ரத்தக் குழாய்கள் விரிவடைதல் போன்ற பிரச்னைகள் தலை தூக்கலாம்.
- இதற்குக் முதற்கட்ட காரணம் நீங்கள் அதிகமாக உங்கள் உடலைச் சிரமத்துக்கு உள்ளாக்கும்போது அந்த அழுத்தம் உங்கள் இதயம் மற்றும் ரத்த ஓட்டத்தை நேரடியாகப் பாதிக்கும். பெண்கள் வாரம் ஒரு முறை கடின உடற்பயிற்சியை மேற்கொண்டால் போதுமானது.
- அதே சமயம் தினமும் கடின உடற்பயிற்சி செய்தால் அவர்களுக்கு மாரடைப்பும், வாதமும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படுத்தும். இந்தக் கடின உடற்பயிற்சி தொடர்ந்தால் மாதவிடாய் ஏற்படாமல் போவது, எலும்புகள் வலுவிழந்து தேய்ந்து போவது, போன்ற நோய்கள் வருவதற்கு வரிசைக்கட்டி நிற்கும்.
-
ஆண்களுக்கு இதே கடின உடற்பயிற்சியால் உடல் சோர்வு போன்றவை ஏற்பட்டு ஆண்மைக் குறைபாடு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். அதீத உடற்பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் உடலுக்குக் கிடைக்க வேண்டிய தேவையான அளவு ஊட்டச்சத்தை நீங்களே தடுப்பதாக அர்த்தம்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US