பிரிட்ஜில் இருந்து 'ஐஸ்' வாட்டரை அப்படியே குடிப்பவரா நீங்கள்? இனி இந்த தவறை செய்யாதீர்கள்!
Health tips
Ice water
By Logeswari
வெயில் காலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குளிர்ந்த நீர், குளிர்பானங்கள் போன்றவற்றை குடிக்க தோன்றும். அந்த காலத்தில் ஹோட்டலுக்கு சென்றால் சாப்பிட்டவுடன் டீ, காபி மட்டுமே மக்கள் குடித்து வந்தனர்.
ஆனால் தற்போது ஐஸ்கிரீம், ஜூஸ் என பலவற்றை எடுத்துகொள்ள நினைக்கின்றனர். அதே சமயத்தில் இது போன்ற குளிர்ந்த பானங்களை குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.
சரி வாங்க குளிர்ந்த நீர் பருகுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்..
- குளிர் காலத்தில் சாதாரண நீர் எப்படி உங்களுக்கு மூக்கடைப்பையும், தொண்டை கரகரப்பையும் ஏற்படுத்துமோ அதே சூழ்நிலையை நீங்கள் குடிக்கும் குளிர்ந்த நீரும் ஏற்படுத்தக்கூடும்.
- ஐஸ்கிரீம் அல்லது அதிக ஐஸ் சேர்க்கப்பட்ட குளிர்பானம் குடிக்கும் போது நீங்கள் ஏற்படும் பாதிப்பை குளிர்ந்த நீரும் ஏற்படுத்தக்கூடும். இது உங்களுடைய பல நரம்புகளை உறைய செய்வதால் இதன் விளைவாக தலைவலி உண்டாகும்.
- பிரிட்ஜில் இருந்து ஜில் என்று இருக்கும் தண்ணீரை அப்படியே அருந்துவதால் உடல்நலத்திற்கு பல தீங்குகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை கொடுத்துள்ளனர். அதுபோல சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீரை குடிப்பதால் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய் பொருள்கள் திட பொருளாக மாறி செரிமானத்தில் பிரச்னையை ஏற்படுத்தும்.
- தினமும் அனைத்து நேரங்களிலும் வெந்நீர் குடிக்கலாம் அல்லது சாப்பிட்ட பிறகு மட்டும் வெந்நீர் குடிக்கலாம். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், சருமத்தின் அழகைக் கூட்ட விரும்புபவர்கள் முடிந்தவரை அனைத்து நேரங்களிலும் வெந்நீர் குடிப்பது நல்லது.
-
வெந்நீர் உடலில் நச்சுகளை வெளியேற்றும். நரம்பு மண்டலத்தை சுத்திகரிக்கும். சூடான நீரை குடிக்க முடியாதவர்கள் காய்ச்சிய நீரை பருகலாம். காய்ச்சிய நீரை பருகுவதால் நோய்த் தொற்றில் இருந்து தப்பிக்கலாம்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US