தயிருடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!
தயிர் என்பது இயற்கையிலேயே நமது உடலுக்கு குளிர்ச்சி தன்மை உடையது. தயிரும் வெங்காயமும் சாப்பிட்டால் உடல் அரிப்பு மற்றும் சோரியாசிஸ் போன்ற குறைபாடுகள் ஏற்படக்கூடும். மேலும் தயிருடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் என்பது குறித்து பார்க்கலாம்..
தயிருடன் மாம்பழம் சாப்பிட்டால் தோல் சம்பந்தமான நோய்கள் உடலின் செயல்பாடுகள் தடை பெறுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். மேலும் தயிருடன் மீன் தவிர்க்கப்படவேண்டும்.
தயிர் என்பது புரோட்டீன் அதிகம் உள்ள பொருளாகும். இதேபோன்று மீனிலும் அதிக அளவு புரோட்டீன் சத்துக்கள் உள்ளது எனவே தயிருடன் மீன் சேர்த்து சாப்பிடுவது கூடாது. எனவே தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு ஏற்படுவதுடன் வயிறு தொடர்பான உபாதைகள் ஏற்படக்கூடும்.
தயிருடன் பால் தவிர்ப்பது நல்லது பால் மற்றும் தயிரை சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு உப்புசம் மற்றும் வாய்வு கோளாறுகள் உள்ளிட்டவை ஏற்பட காரணமாக அமைந்துவிடும்.