விஷமாக மாறும் உணவுகள்! இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன?
தேவைக்கு அதிகமாகவே உணவைச் சமைத்து அதை பிரிட்ஜில் வைத்துகொள்கிறோம். அதை விரும்பும்போது மீண்டும் மைக்ரோவேவ் அவனிலோ, அடுப்பிலோ வைத்து சூடுபடுத்தி சாப்பிடுவது இந்த காலத்தில் வழக்கமாகிவிட்டது.
அப்படி மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத உணவுகள் மற்றும் மீறி சூடுபடுத்தி சாப்பிட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து பார்க்கலாம்..
காளானைச் சமைத்து அப்போதே சாப்பிடுவதே சிறந்தது. காளானிலும் புரோட்டீன் அதிகமாக உள்ளது. இதை இரண்டாம் முறை சூடுபடுத்தும்போது அது விஷமாக மாறி செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.
உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்து பிரிட்ஜில் வைத்துவிட்டு தேவைப்படும்போது சாப்பிடும் பழக்கம் பலருக்கு உண்டு. அப்படி செய்யும்போது சமைத்த உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கி விட வாய்ப்புகள் உள்ளன.
கீரை உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதால் செரிமான பிரச்னைகள் உண்டாகும். குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.