கடக ராசிக்கு செல்லும் செவ்வாய்! வாழ்க்கையில் பிரச்சினைகளை சந்திக்கப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா?

horoscope zodiac life
By Kishanthini Jun 03, 2021 10:06 AM GMT
Report

செவ்வாய் மிதுன ராசியில் இருந்து வெளியேறி, கடக ராசிக்கு ஜூன் 2 ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 6:39 மணிக்கு இடம் பெயர்ந்துள்ளார். 

செவ்வாய் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்வதால் ஒவ்வொரு ராசிக்காரரும் எம்மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் இடம் பெயர்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். தொழில் ரீதியாக, உங்கள் துறையில் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். வேலைகளில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் உள்ளன. பெற்றோரின் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.

இக்காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். மன அமைதியை இழந்து இருப்பீர்கள். உறவுகள் மோசமடைவதைத் தவிர்க்க, குடும்ப உறுப்பினர்களிடம் சரியாக நடந்து கொள்ளுங்கள்.

சொத்து அல்லது நில விவகாரத்தை மிகவும் கவனமாக நிர்வகிக்க அறிவுறுத்தப்படுகிறது. முடிந்தவரை இக்காலத்தில் அதை தவிர்த்து ஒத்தி வைப்பது நல்லது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இதய பிரச்சனை உள்ளவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் பணி வாழ்க்கையில் சில மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் சந்திப்பீர்கள். மறுபுறம் செவ்வாயில் சரியான நிலையால் நல்ல வளர்ச்சி மற்றும் பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளது.

நிதி ரீதியாக, இந்த காலம் உங்களுக்கு நல்ல முடிவுகளைத் தரும். மேலும் சொந்த முயற்சிகளால் உங்கள் வணிகத்தில் முன்னேறுவீர்கள். இக்காலத்தில் செலவுகள் உயரும். இளைய உடன்பிறப்புகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புள்ளது.

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இரத்தம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.

மிதுனம்

மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளால் நீங்கள் அன்புக்குரியவர்களை காயப்படுத்தலாம். எனவே பேசும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

நிதி ரீதியாக, தேவையற்ற செலவுகள் காரணமாக சில நிதி பற்றாக்குறை ஏற்படலாம். செவ்வாயின் நிலை காரணமாக, உங்கள் மாமியாரிடமிருந்து செல்வம் மற்றும் சொத்தின் அடிப்படையில் திடீர் லாபம் பெற வாய்ப்புகள் உள்ளன.

இந்த காலகட்டத்தில் கடன் கொடுப்பதையோ அல்லது கடன் வாங்குவதையோ தவிர்க்க வேண்டும். தொழில் ரீதியாக, வளர்ச்சியின் அடிப்படையில் வேலையில் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள். முக்கியமாக வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

கடகம்

கடக ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இந்த செவ்வாய் பெயர்ச்சியால், இக்காலத்தில் கோபத்தைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. தொழில் ரீதியாக, பணம் மற்றும் தொழில் வளர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

நிதி ரீதியாக, இக்காலம் சராசரியாக இருக்கும். நல்ல வருமானம் இருக்கும். ஆனால் அதில் சில தடைகளும் இருக்கும்.

செவ்வாயின் நிலை காரணமாக, உங்கள் ஆக்ரோஷமான அணுகுமுறையால் திருமண வாழ்க்கையில் சில தவறான புரிதல்கள் இருக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நடைப்பயிற்சி அல்லது வாகனம் ஓட்டும் போது விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

சிம்மம்

சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இந்த காலக்கட்டத்தில் நீங்கள் சில நிச்சயமற்ற தன்மைகளையும் வேலை அழுத்தத்தையும் சந்திக்க நேரிடும். எனவே வணிகத்தில் பெரிய முதலீடுகளை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. உயர்கல்வி அல்லது படிப்புகளுக்காக வெளிநாட்டு பயணத்திற்கான வாய்ப்புகள் உள்ளன.

நிதி ரீதியாக, மருத்துவ செலவுகள் உயரக்கூடும். உங்கள் திருமண வாழ்க்கையிலும் உங்கள் துணையின் ஆரோக்கியத்திலும் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் உங்கள் உயர் அதிகாரிகள் அல்லது சக ஊழியர்களிடமிருந்து உங்களுக்கு எந்த ஆதரவும் கிடைக்காது.

எனவே, சர்ச்சைகள் மற்றும் வாதங்களில் சிக்காமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தூக்கமின்மை, வயிற்று பிரச்சினைகள் மற்றும் தேவையற்ற பதட்டங்களால் பாதிக்கப்படலாம்.

கன்னி

கன்னி ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இக்காலம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. நிதி ரீதியாக, செலவுகள் மற்றும் நிதித் தேவைகள் அதிகரிக்கும். இது மன கவலைகளை அதிகரிக்கும். தொழில் ரீதியாக, இந்த காலகட்டத்தில் எந்தவொரு வேலை மாற்றத்தையும் திட்டமிடவோ அல்லது செய்யவோ வேண்டாம். இந்த காலம் வணிகர்களுக்கு திருப்திகரமாக இருக்கும்.

இருப்பினும், எந்தவொரு நல்ல லாபத்தையும் பெறமாட்டார்கள் என்பதால் பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இக்காலத்தில் வாழ்க்கைத் துணையுடன் சில முரண்பாடுகள் ஏற்படக்கூடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் சிறு காயங்களும் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.

துலாம்

துலாம் ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இக்காலத்தில் உங்கள் வேலை அல்லது வியாபாரத்தில் சிறந்ததை வைக்க முயற்சிப்பீர்கள். இக்காலத்தில் அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்க வேண்டாம்.

செவ்வாயின் நிலை காரணமாக, வேலையில் சில பாதகமான விளைவுகளை சந்திக்க நேரிடும். நிதி ரீதியாக, பண நிலை சராசரியாக இருக்கும். எனவே, உங்கள் செலவுகளை சரிபார்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது. உறவுகளைப் பொறுத்தவரை, கொஞ்சம் சிரமத்தை சந்திக்க நேரிடும், ஆனால் மறுபுறம், புதிய உறவுகள் மகிழ்ச்சியைத் தரக்கூடும்.

திருமண வாழ்வில் முரண்பாட்டைத் தவிர்க்க உறவில் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் மற்றும் உங்கள் வாழ்க்கை துணையின் ஆரோக்கியம் நன்றாகத் தான் இருக்கும். ஆனாலும் ஜங்க் உணவுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இக்காலத்தில் உடல் மற்றும் மன அழுத்தத்தை உணரலாம். செவ்வாயின் நிலை, உங்களுக்கு இக்காலத்தில் அதிர்ஷ்டத்தை வழங்காது. எனவே இந்த காலத்தில் நீங்கள் எதை அடைய நினைத்தாலும், உங்கள் திறனை முழுமையாக நம்ப வேண்டியிருக்கும். நிதி பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

ஆனுல் நல்ல வருமானத்திற்கு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் தந்தையுடனான உறவு மோசமாகும். இக்காலத்தில் உங்கள் நற்பெயர் மற்றும் புகழைக் கெடுக்க உங்கள் எதிரிகள் செயல்படுவார்கள் என்பதால் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மனக் கவலையைப் போக்க யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

தனுசு

தனுசு ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இக்காலத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாக, நீங்கள் நிறைய கடின உழைப்பைச் செய்ய வேண்டியிருக்கும்.

மேலும் சில தனிப்பட்ட காரணங்கள் அல்லது வேலை காரணமாக நீண்ட பயணங்களை செல்ல வேண்டியிருக்கும். நிதி ரீதியாக, தேவையில்லாமல் செலவழிப்பதைத் தவிர்த்து, சேமிக்க முயற்சி செய்ய வேண்டும். இக்காலத்தில் கடன்களைப் பெறுவதில் சிரமத்தை சந்திப்பீர்கள்.

உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் இடையில் ஏதேனும் சிக்கல் அல்லது கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். ஆனால் இது சரியான தகவல்தொடர்பு மூலம் தீர்க்கப்படலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அறுவை சிகிச்சை செய்ய சாத்தியம் உள்ளதால், மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

மகரம்

மகர ராசியின் 7 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் திருமண வாழ்க்கையில் சச்சரவுகள் மற்றும் மோதல்கள் ஏற்படலாம். எனவே உங்கள் வாழ்க்கை துணையுடன் வாதங்கள் மற்றும் சண்டைகளிலிருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

கூட்டு வணிகம் செய்பவர்கள் சில சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். நிதி ரீதியாக, காலம் சராசரியாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறுநீரக பாதை தொற்று, வயிற்று கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்படக்கூடும் என்பதால், இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்களையும் உங்கள் துணையையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

கும்பம்

கும்ப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இக்காலத்தில் நீங்கள் உங்கள் தொழில்முறை வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் உங்கள் சக ஊழியர்களுடன் எந்தவிதமான மோதல்களையும் விவாதங்களையும் தவிர்க்க வேண்டும்.

மேலும், உங்கள் உயர் அதிகாரிகளிடம் கவனமாக இருங்கள். நிதி ரீதியாக, தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

உங்கள் திருமண வாழ்க்கை கொஞ்சம் பதட்டமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே, சரியான உடற்பயிற்சியைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

மீனம்

மீன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் பிள்ளைகள் சில உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படக்கூடும். எனவே அவர்களைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

மேலும் உங்கள் பிள்ளைகள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்துவதில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். தொழில் ரீதியாக, பணியிடத்தில் உங்கள் சக ஊழியர்களால் பணியிடத்தில் மோதலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

நிதி ரீதியாக, இந்த காலகட்டத்தில் உங்கள் செலவுகள் எழக்கூடும். எனவே எச்சரிக்கையாக இருங்கள். இக்காலத்தில் உறவுகளில் ஏதேனும் சிக்கலை அல்லது சர்ச்சையை சந்திக்க நேரிடும். எனவே, உங்கள் உறவில் எந்த முக்கிய நடவடிக்கைகளையும் எடுக்காதீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிற்று பிரச்சனைகள் மற்றும் சில உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.  

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US