நாவூறும் சுவையில் முட்டை 65.., எப்படி செய்வது?
சாம்பார் சாதம், ரசம் சாதம், கலவை சாதம் என அனைத்திற்கும் இந்த சுவையான முட்டை 65 சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.
இதனை வீட்டில் உள்ள குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்க்ள.
அந்தவகையில், நாவூறும் சுவையில் முட்டை 65 எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முட்டை- 5
- கடலை மாவு- ½ கப்
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
- வெங்காயம்- 1
- கறிவேப்பிலை- 1 கொத்து
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
- பச்சைமிளகாய்- 1
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
- கரம் மசாலா- ½ ஸ்பூன்
- மிளகு தூள்- ½ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டை மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவைத்து தோலுரித்து எடுத்துக்கொள்ளவும்.
பின் வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து சிறிது சிறிதலாக வெட்டிக்கொள்ளவும்.

அடுத்து இதில் கடலை மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து கலந்துகொள்ளவும்.
இதற்கடுத்து இதில் மிளகாய் தூள், மல்லி தூள், மிளகு தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்துகொள்ளவும்.
இறுதியாக அடுப்பில் வாணல் வைத்து சூடானதும் சிறிய சிறிய உருண்டைகளாக சேர்த்து பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சுவையான முட்டை 65 தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |