பிரித்தானியாவில் கடும் விலை உயர்வை சந்தித்த உணவுப் பொருட்கள்
பிரித்தானியாவில், முட்டை, வெண்ணெய் முதலான உணவுப் பொருட்கள் கடும் விலை உயர்வை சந்தித்ததால், உணவுப்பொருட்கள் பணவீக்கம் அதிகரித்துள்ளது.
அதிகரித்த உணவுப்பொருட்கள் பணவீக்கம்
உணவுப்பொருட்கள் பணவீக்கம் அல்லது உணவு பணவீக்கம் என்பது, உணவுப்பொருட்கள் விலை அதிகரிப்பால், குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் ஒரு விடயமாகும்.
பிரித்தானியாவைப் பொருத்தவரை, இந்த மாதம் முட்டை, வெண்ணெய் முதலான உணவுப் பொருட்கள் கடும் விலை உயர்வை சந்தித்ததால், உணவுப் பணவீக்கம் 4.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
The British Retail Consortium (BRC) என்னும் சில்லறை வர்த்தகம் தொடர்பிலான அமைப்பின் தலைவரான Helen Dickinson என்பவர், இந்த உணவுப்பொருட்கள் விலை உயர்வு, ஏற்கனவே விலைவாசி உயர்வால் அவதியுற்றுவரும் மக்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்.
வெண்ணெய் மற்றும் முட்டை போன்ற உணவுப்பொருட்கள், தேவை அதிகரிப்பு, விநியோகம் குறைவு மற்றும் நேரடி தொழிலாளர் செலவுகள் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக விலை உயர்ந்துள்ளன.
அவற்றின் விலை உயர்வால் உணவுப் பணவீக்கம் அதிகரித்துவிட்டது.
சேன்ஸலர் ரேச்சல் ரீவ்ஸ் கடந்த பட்ஜெட்டில் பணி வழங்குவோரின் தேசிய காப்பீட்டு பங்களிப்புகள் மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, சில்லறை வர்த்தகத்துறை 7 பில்லியன் பவுண்டுகள் அளவுக்கு புதிய செலவுகளை எதிர்கொள்கிறது என்று கூறியுள்ளார் Helen Dickinson.
இந்நிலையில், வரிகளை அதிகரிப்பது தொடர்பில் சுமார் 60 சில்லறை வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் சேன்ஸலர் ரேச்சல் ரீவ்ஸுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில், அடுத்த பட்ஜெட்டில் மேலும் வரிகளை அதிகரிப்பது பிரித்தானிய வாழ்க்கைத்தரத்தை அதிகரிக்கும் அவரது திட்டங்களுக்கு முரணாக அமையலாம் என எச்சரித்துள்ளார்கள்.
அத்துடன், இந்த ஆண்டில் உணவுப்பணவீக்கம் 6 சதவிகிதத்தை எட்டக்கூடும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தங்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |