காரசாரமான முட்டை சுக்கா: தயாரிப்பது எப்படி?
முட்டையில் புரதம் ரிபோப்லாவின், போலேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம், மக்னீசியம், விட்டமின் A, E மற்றும் B6 அதிகமாக உள்ளது.
முட்டையில் எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் D மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.
இத்தனை சத்துள்ள முட்டையை பயன்படுத்தி சுவையான முட்டை சுக்கா எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
lancaster farming
தேவையான பொருட்கள்
- கடுகு- 1/4 டீஸ்பூன்
- சோம்பு- 1/4 டீஸ்பூன்
- முட்டை- 5
- மிளகாய்தூள்- 1ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்
- கரம் மசாலாத்தூள்- 1ஸ்பூன்
- சாம்பார் வெங்காயம்- ஒரு கப்
- இஞ்சிபூண்டு பேஸ்ட்- 1/4 டீஸ்பூன்
- தயிர்- 1ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் 5 முட்டைகளை உடைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதில் மஞ்சள்தூள், மிளகாய்தூள், கரம் மசாலாத்தூள், மல்லித்தூள், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை உடைத்து வைத்துள்ள முட்டை கலவையில் சேர்க்க வேண்டும்.
இதனை நன்றாக அடித்து கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
மற்றொரு புறம் ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும்.
தண்ணீர் கொதித்ததும் முட்டை கலவையை ஒரு தட்டில் ஊற்றி அதனுள் வைத்து ஆவியில் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பின்னர் வேகவைத்த முட்டையை எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன்பிறகு அடுப்பில் இரு வாணலியை வைத்து காய்ந்ததும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு காய்ந்த மிளகாய் தாளித்து அதில் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
அதில் சிறிதளவு இஞ்சுபூண்டு விழுது சேர்க்க வேண்டும்.
பச்சை வாடை போன பிறகு அதில் மிளகாய்தூள், மஞ்சள் தூள், மிளகு, சீரகம் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
இதில் ஒரு ஸ்பூன் கெட்டி தயிர் சேர்த்து வதக்கி அதில் வெட்டி வைத்துள்ள முட்டைகளை அதில் சேர்த்து கிளறி இறக்கினால், முட்டை சுக்கா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |