உங்களுக்கு அதிகமாக தலைமுடி உதிருதா? முட்டையை இப்படி பயன்படுத்தினாலே போதும்
பொதுவாக தலைமுடி உதிர்வதற்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் தலைமுடிக்கு கிடைக்காமல் இருப்பதும் முக்கிய காரணம்.
தலைமுடி உதிர்வதை நிறுத்துவதற்கு முயலாமல் இருந்தால், பின் உங்கள் முடி எலிவால் போன்றோ, ஆங்காங்கு வழுக்கையாகவோ தென்பட ஆரம்பித்துவிடும்.
தலைமுடி உதிர்வதை நிறுத்தி, முடியின் அடர்த்தியை அதிகரிக்க பல்வேறு பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்களால் தலைமுடிக்கு பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தால், முடி உதிர்வது நிற்பதோடு, முடியும் அடர்த்தியாகும்.
இதில் முட்டை ஒரு முக்கிய பங்கங்காகும். இதனை எப்படி பயன்படுத்துவது என்று இங்கு பார்ப்போம்.
தேவையானவை
- முட்டை 1
- பால் - கால் கப்
- விளக்கெண்ணெய் - 3 ஸ்பூன்
செய்முறை
முட்டையினை உடைத்து பாலுடன் சேர்த்து நுரை பொங்க அடித்துக் கொள்ளவும். அடுத்து அதனுடன் விளக்கெண்ணெய் சேர்த்து பிரிட்ஜில் வைத்து குளிர விட்டு மீண்டும் மிக்சியில் போட்டு அடிக்கவும்.
இதேபோல் 3 முறை செய்தால் முட்டை ஹேர்பேக் தயார்.
இந்த முட்டை ஹேர்பேக்கினை தலைமுடியில் தேய்த்து, 30 நிமிடங்கள் கைகளால் வேர் நுனி, வேர்க் கால்கள் என அப்ளை செய்து அலசினால் தலைமுடி உறுதியாகும். முடி கொட்டும் பிரச்சினை காணாமல் போகும்.