முட்டை சாப்பிடுகிறவர்களுக்கு ஒரு எச்சரிக்கை!
முட்டை பலருக்கும் பிடித்த ஒரு உணவு பொருளாக இருக்கிறது. சிலர் வேகவைத்த முட்டைகளை விரும்புகிறார்கள் மற்றும் சிலர் ஆம்லெட்டை விரும்புகிறார்கள்.
முட்டை சாப்பிட்டால் பல நன்மைகள் உண்டு என்றாலும் அதிகம் சாப்பிடுவதால் உடலுக்கு பிரச்சனைகள் ஏற்படும்.
முட்டை மஞ்சள் கருவை அதிகம் சாப்பிடுவதால் இதய நோய் ஏற்படலாம்.
அதிக முட்டைகளை சாப்பிடுவதால் பலருக்கு வீக்கம் மற்றும் வாயுப் பிரச்சனை ஏற்படலாம். அதிக முட்டைகளை சாப்பிடுவது செரிமான அமைப்பில் அழுத்தம் மற்றும் கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தும்.
asianetnews
ஒரு முட்டையில் 186 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ளது.. ஒரு நபர் தினமும் 300 மில்லிகிராம் கொழுப்பை மட்டுமே உட்கொள்ள வேண்டும். ஆனால் நீங்கள் ஒரு நாளைக்கு அதிக முட்டைகளை சாப்பிட்டால், கெட்ட கொலஸ்ட்ரால் கடுமையாக உயர்ந்து, இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்.
நீரிழிவு நோய் அல்லது ப்ரீடியாபயாட்டீஸ் உள்ளவர்கள் அதிக முட்டைகளை சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளையும் சந்திக்க நேரிடும்.
முட்டையை அதிகமாக நுகர்வதால், இரத்த சர்க்கரை அளவு பாதிக்கப்படலாம். உயர் இரத்த சர்க்கரை டைப்-2 நீரிழிவு அபாயத்தையும் அதிகரிக்கிறது