உடல் எடையை குறைக்க புரோட்டீன் நிறைந்த முட்டை இட்லி.., எப்படி செய்வது?
தற்போது பெரும்பாலான நபர்களுக்கு உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை இருக்கிறது.
உடல் உழைப்பு இல்லாதது, துரித உணவுகள், மன அழுத்தம், மாத்திரைகளின் பக்கவிளைவுகள் என உடல் எடைக்கு பல காரணங்கள் உண்டு.
அந்தவகையில், உடல் எடையை குறைக்க புரோட்டீன் நிறைந்த முட்டை இட்லி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முட்டை- 3
- பன்னீர்- 200g
- வெங்காயம்- 1
- பச்சைமிளகாய்- 2
- தேங்காய் துருவல்- 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் முட்டை சேர்த்து நன்கு கலந்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதில் பன்னீரை துருவி சேர்த்து கலந்துக்கொள்ளவும்.

அடுத்து இதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து இதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
இறுதியாக இதனை இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேகவைத்து எடுத்தால் சத்தான முட்டை இட்லி தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |