அருமையான சுவையில் குழந்தைகளுக்கு பிடித்த முட்டை மசாலா டோஸ்ட் செய்வது எப்படி?
தினமும் காலையில் இட்லி தோசை சாப்பிட்டு, ஏதாவது புதிதாக சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா?
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது முட்டை வைத்து ஒரு டோஸ்ட் தான். அதை எப்படி இலகுவாக செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பாண்
- முட்டை - 10
- வெங்காயம் - 2 நறுக்கியது
- பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
- மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- மிளகு தூள் - 1 தேக்கரண்டி
- உப்பு - 1 தேக்கரண்டி
- சில்லி பிளேக்ஸ் - 2 தேக்கரண்டி
- கொத்தமல்லி இலை
- வெண்ணெய்
செய்முறை
1. ஒரு கிண்ணத்தில் 10 முட்டைகளை உடைத்து ஊற்றிக்கொள்ளவும். முட்டையை நன்றாக அடித்து வைக்கவும்.
2. அடித்த முட்டையில், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு, மிளகாய் தூள், கைப்பிடியளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவும்.
3. ஒரு பாண் துண்டை எடுத்து, அதை ஒரு தட்டில் வைத்து, முட்டை கலவையை பாண் துண்டுகள் மீது ஊற்றவும்.
4. ஒரு தவாவை சூடாக்கி, வெண்ணெய் சேர்த்து நன்றாக பரப்பி, தவாவின் மீது முட்டை கலவையுடன் உள்ள பாண்ட துண்டுகளை வைக்கவும்.
5. மறுபுறம் முட்டை கலவையை ஊற்றி சமமாக பரப்பவும்.
6. ஒரு பக்கம் வெந்ததும், பாண் துண்டுகளை புரட்டி, சிறிது வெண்ணெய் சேர்த்து, தவாவின் மீது மெதுவாக வைக்கவும்.
7. இரண்டு பக்கமும் வெந்ததும் தவாவில் இருந்து இறக்கினால் சுவையான மற்றும் குழந்தைகளுக்கு பிடித்த முட்டை மசாலா டோஸ்ட் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |