உச்சம் தொடும் முட்டை விலை: பறவைக்காய்ச்சல் அச்சம் காரணம்
பறவைக்காய்ச்சல் அச்சம் காரணமாக, அமெரிக்காவில் முட்டை விலை உச்சம் தொட்டுள்ளது.
உச்சம் தொடும் முட்டை விலை
அமெரிக்காவில் பறவைக்காய்ச்சல் அச்சம் காரணமாக, முட்டை விலை எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளது.
கடந்த மாதம், சராசரியாக ஒரு டசன் முட்டை 4.95 டொலர்களுக்கு (இலங்கை மதிப்பில் 1,457.53 ரூபாய்) விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு பெட்டி முட்டை, சில இடங்களில் 10 டொலர்கள் வரை விற்பனை செய்யப்படுகிறது. இலங்கை மதிப்பில் அது 2,944.50 ரூபாய் ஆகும்.
காரணம் என்ன?
அமெரிக்காவில் பறவைக்காய்ச்சல் தொற்று பரவிவருவதால் முட்டை விலை அதிகரித்துவருகிறது.
அதாவது, கோழிகளிடையே பறவைக்காய்ச்சல் தொற்று பரவிவருவதால், மேலும் அந்நோய் பரவுவதைத் தவிர்ப்பதற்காக, பல மில்லியன் கோழிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் கொன்றுவருகிறார்கள்.
ஆக, முட்டையிடும் கோழிகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. ஆகவே, முட்டை உற்பத்தியும் குறைந்துள்ளது. ஆகவே முட்டை விலை எக்கச்சக்கமாக உயர்ந்துவருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |