முட்டை இல்லாமல் ஈஸியான கேக் ரெசிபி! இறுதியாக இதை மட்டும் மறக்காம பண்ணுங்க
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் அடுத்தடுத்து வரு இருகின்றது. இதற்கு எல்லாம் கேக் இல்லாமல் எப்படி?
கேக் என்றாலே பண்டிகை மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போது முக்கியத்துவம் பெருகின்றது.
இதை கடையில் வாங்குபவர்களை விட வீட்டிலேயே செய்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் அதிகம். கடைகளில் செய்வதற்கு சுவைக்காக நிறைய பொருட்களை பயன்படுத்துவார்கள். ஆனால் வீட்டில் செய்தால் உடல் நலத்திற்கு ஏற்ப பொருட்களை சேர்த்து செய்யலாம்.
ஒரு சிலருக்கு கேக்கில் முட்டை இட்டு செய்வது பெரும்பாலும் விருப்பமற்றதாகவே இருக்கும். முட்டை இட்டு செய்தால் முட்டையின் பச்சை மணம் வரும் என்று நினைப்பார்கள். ஆகவே முட்டையை தவிர்த்து எப்படி மென்மையான மற்றும் சுவையான கேக் செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
-
1/2 கப் தயிர்
-
1/4 கப் எண்ணெய்
-
1 கப் கோதுமை மாவு
- 1/2 கப் பொடித்த சர்க்கரை
-
1 ஸ்பூன் பேக்கிங் பவுடர்
- 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா
- 1 ஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ்
செய்முறை
-
ஒரு பாத்திரத்தில் தயிர் மற்றும் எண்ணெய் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
- கோதுமை மா, சர்க்கரை, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா கலந்து, அதனுடன் 2 ஸ்பூன் பால் சேர்த்து வெண்ணிலா எசென்ஸ் கலந்து கிளறிக் கொள்ள வேண்டும்.
- அதை கேக் செய்யும் பாத்திரத்தில் இட்டு, ஓவெனில் 180'c இல் 20 நிமிடம் வைத்து எடுக்கவும்.
- இவ்வாறு செய்து ஆறியதும் எடுத்தால், சூப்பரான கேக் தயார்.