முட்டையை பிரிட்ஜில் வைப்பவரா நீங்கள்? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்
முட்டை தொடர்பில் எப்போதும் பலருக்கும் பல சந்தேகங்கள் வரும். முட்டை சாப்பிட்டால் நல்லது, முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடவே கூடாது, முட்டையால் ஏற்படும் பாதிப்புகள் இப்படி பல செய்திகள் பரவி வருகிறது.
முட்டையை பிரிட்ஜில் வைக்கலாமா?
முட்டையை பிரிட்ஜில் வைக்காமல் இருந்தால் நிச்சயம் பாதிப்புகள் ஏற்பட கூடும். காரணம் இவற்றில் உள்ள பாக்டீரியாக்கள் தான். 3 நாட்களுக்கு மேல் வெளியில் உள்ள முட்டையை நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும். இல்லையேல் பாக்டீரியாக்களினால் ஒவ்வாமை உண்டாகும்.
சர்க்கரை நோயை தடுக்குமா முட்டை?
முட்டை சாப்பிட்டால் சர்க்கரை நோய் முழுமையாக தடுக்க படாது. ஆனால், இதுவும் ஒரு காரணியாக சர்க்கரை நோயை தடுக்க உதவும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
மஞ்சள் கரு ஆபத்தா?
முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடவே கூடாது என ஒரு கும்பல் அலப்பறை செய்யும். ஆனால், அது அப்படி கிடையாது. மஞ்சள் கருவில் வைட்டமின் எ, கே, டி, பி பல்வேறு வைட்டமின் உள்ளன, இது உடலுக்கு நன்மைகள் ஆகையால் அதை அளவான அலவில் சாப்பிட்டு வரலாம்.
முட்டையும் கிருமியும்
முட்டையில் சால்மோனெல்லா என்கிற பாக்டீரியா உள்ளது. ஆதலால், முட்டையை பச்சையாக சாப்பிடுவது பலருக்கு மோசமான பாதிப்பை உண்டாக்க கூடும். எனவே, நன்றாக சமைத்து சாப்பிட்டால் இந்த பாக்டீரியா இறந்து விடும்.