முடி உதிர்வை நிரந்தரமாக நிறுத்த உதவும் முட்டை.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை முடி உதிர்வு.
ஒழுங்கற்ற உணவு, ஊட்டசத்து குறைபாடு, தூக்கமின்மை போன்ற காரணங்களால் முடி உதிர்வு ஏற்படுகிறது.
அந்தவகையில், முடி உதிர்வை நிரந்தரமாக நிறுத்த முட்டையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- முட்டை- 1
- தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
அதன் பின் கலந்துவைத்த கலவையை தலைமுடியில் தடவி அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் மென்மையான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
இந்த ஹேர் பேக்கை வாரம் 1-2 முறை பயன்படுத்தி வர முடி உதிர்வு நிரந்தரமாக நின்றுவிடும்.
2. தேவையான பொருட்கள்
- முட்டை- 1
- தயிர்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு இதை தலைமுடியில் தடவி, அரை மணிநேரம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
அதன் பின் மென்மையான ஷாம்பு கொண்டு தலைமுடியை அலச வேண்டும்.
இந்த கலவை முடியை வலிமைப்படுத்துவதோடு, தலைமுடியை மென்மையாக வைத்துக் கொள்ள உதவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |