எலி வால் போல் இருக்கும் முடியை அடர்த்தியாக்க உதவும் முட்டை.., எப்படி பயன்படுத்துவது?
பெண்களின் தலைமுடி என்பது எப்பொழுதும் ஒரு தனி அழகுதான்.
ஆனால் முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி மெலிதாகி விடுகின்றன.
அந்தவகையில், அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு முட்டையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- முட்டை- 1
- தயிர்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதை தலைமுடியில் தடவி, அரை மணிநேரம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
அதன் பின் மென்மையான ஷாம்பு கொண்டு தலைமுடியை அலச வேண்டும்.
இந்த ஹேர்பேக் தொடர்ந்து பயன்படுத்திவர முடியை வலிமைப்படுத்துவதோடு, தலைமுடியை பட்டுப்போன்று மென்மையாக வைத்துக் கொள்ள உதவும்.
2. தேவையான பொருட்கள்
- முட்டை-1
- தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
அதன் பின் அதை தலைமுடியில் தடவி அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
அடுத்து மென்மையான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
இந்த ஹேர் பேக்கை வாரம் 1-2 முறை பயன்படுத்தி வர முடி நன்கு அடர்த்தியாக நீளமாக வளரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |