நாங்க அனைத்திற்கும் தயார்... இந்தியாவுக்கு சவால் விடும் இங்கிலாந்து வீரர்
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் அனத்திற்கும் நாங்கள் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்யணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, இங்கு முதலில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இந்த தொடர் குறித்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் சோப்ரா ஆர்ச்சர் கூறுகையில், இதை தொடர்ந்து பெரிய தொடர்கள் வரிசைகட்டி நிற்கிறது. இதனால், உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது முக்கியம். மருத்துவ பாதுகாப்பு விதிமுறைக்குள் பல மாதங்கள் இருக்கப்போவது உறுதி. இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.
நான் இங்கு ஐபிஎல்லில் விளையாடியுள்ளேன். ஒருமுறை கூட டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றது கிடையாது. ஆசியக் கண்டத்தில் இதுதான் முதல்முறை. எங்கள் அணி வேகப்பந்து வீச்சாளர்கள் திறமையானவர்கள். நிச்சயம் குழுவாகச் இணைந்து சிறந்த பங்களிப்பை வழங்குவோம். மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் களமிறங்கும் நிலை உள்ளது.
பவுன்சர் வீசுவது பற்றி மைதானத்தைப் பொறுத்து முடிவு செய்யப்படும். நான் இன்னும் மைதானத்தைப் பார்வையிடவில்லை. நாங்கள் அனைத்திற்கும் தயாராகத்தான் வந்துள்ளோம் என்று கூறியுள்ளார்.