மருத்துவமனையில் தாய்: ஈழத்து இளைஞர் பட்ட அவஸ்தை! கலங்க வைக்கும் காட்சி
உலகில் விலங்குகள் மட்டுமின்றி மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் அம்மா என்ற சொல் கடவுளுக்கும் மேல். ஏனெனில் இந்த உலகிற்கு தன்னை கொண்டுவந்தவள் அவள் தான்.
ஆனால் இன்று பலருக்கும் தாயின் வலிகள் மற்றும் பாசம் இவையெல்லாம் புரிந்துகொள்ளாமல், பலரும் வயதான தங்களது பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் கொண்டு சென்றுவிடும் அவலம் அரங்கேறி வருகின்றது.
நம்மை வயிற்றில் சுமக்கும் போது எதற்கு இந்த பாரம்? என்ற கேள்வி அவள் மனதில் இருந்திருந்தால், நாம் பூமிக்கு வந்திருப்போமா? இந்த கேள்விக்கு நம் அனைவரின் பதில் இல்லை என்பதே.
அவ்வாறு நம்மை கருவறையில் சுமந்த தாய்க்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் சென்றால் ஒரு உண்மையான மகனின் நிலை என்பதை மிகவும் அருமையாக விளக்கியுள்ள பாடலே இதுவாகும்.
“ஈகோ இல்லா இதயம் கொண்டவளே“ ஈழத்து கலைஞர்கள் உருவாக்கிய கண்கலங்க வைக்கும் பாடல் காட்சி இதோ....