பல்லாயிரம் வருடங்களானாலும் மங்காத எகிப்திய மர்மகதை!
பல மர்மங்கள் நிறைந்து காணப்படும் இந்த மாயமான உலகில் அழகாக தென்படும் எநதுவம் ஆபத்துகள் நிறைந்ததாகவே காணப்படும்... பல ஆண்டுகள் கடந்தும் இந்த மர்மம் தொடர்பில் ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஆராய்ச்சி செய்தும் கணித்தும் கூறி வருகின்றனர்கள் ... அப்படி எதைப்பற்றி ஆராய்ச்சியாளர்கள் கணிக்கின்றனர்?? ...
எகிப்திய மர்மங்கள்.... பல்லாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த எகிப்தியர்கள் தனது காலகட்டங்களில் பல நாகரீகங்களைப் பேணியும் அந்த நாகரீகங்களில் பல பண்புகளைப் பேணியும் வந்தனர்... அவர்களின் கலைப்படைப்புக்கள் இன்றுவரை இன்றியமையாத ஒன்றாகும்.எகிப்திய பிரமீடுகள் இன்று உலக அதிசயங்களுல் ஒன்றாகும்..
முதலில் எகிப்தில் தச்சூர் நகரத்தில் உள்ள சிவப்பு பிரமீடும, பின்னர் மன்னர் கூபுவின் வெள்ளை பிரமீடும் மிகப்பெரிய அமைப்புக்களாக இருந்தன. உலக அதிசயங்களுள் இன்றும் நிலைத்திருப்பது கூபுவின் பெரிய பிரமிடு மட்டும் தான். பிரமீட்டின் முழுக் கட்டுமானமும் பெரும்பாலும் சுண்ணக்கல்லால் கட்டப்பட்டுள்ளது; சில உள்ளறைகள் சிவப்பு கிரானைட்டு கற்களால் ஆனவை.
கட்டிடவியல் அதிசயம் எனப்படும் பெரி பிரமிடில் 2.5 டொன்களில் இலிருந்து 15 டொன்கள் வரை எடையுள்ள 1,300,000 கற்கள் கொண்டு 13 ஏக்கரா நிலப்பரபில் கட்டுமானத்தை மேற்கொண்டுள்ளனர். இதன் அடி சதுரத்தின் ஒவ்வொரு பக்கமும் ஏறத்தாழ 755 அடி நீளமும் 488 அடி உயரமாக இருந்தது. ஆனால் உச்சியில் இருந்த வெண்ணிற துரா சுண்ணக்கற்கள் திருடப்பட்டு கெய்ரோவில் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டதால் இன்று இதன் உயரம் 455 அடியாக உள்ளது. இருப்பினும் இதுவே மிக உயரமான பிரமீடாக இன்றுவரை காணப்படுகிறது..
உலகில் கட்டப்பட்ட பிரமிடுகளில், கனவளவு அடிப்படையில் மிகப் பெரியது மெக்சிகோவில் உள்ள சோலுலாவின் பெரிய பிரமீடு ஆகும். இப் பிரமிடு இன்னும் ஆராய்ச்சியாளர்களால் அகழப்பட்டு வருகின்றது.
பிரமிடு வடிவிலான கட்டிடங்கள் எகிப்தியர், மாயர், சுமேரியர் உள்ளிட்ட பல பழமைவாய்ந்த நாகரிக மக்களால் அமைக்கப்பட்டன.
பாரிசில் உள்ள லுாவர் அருங்காட்சியகம் முன்பாகக் கண்ணாடியிலான பிரமிடு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் நெவாடா மாநில லாஸ் வேகாஸ் நகரில் லக்சர் ஓட்டல் எகிப்திய பிரமிடின் வடிவமைப்பில் கண்ணாடியால் கட்டப்பட்டுள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்றான பிரமீடு அழகு நிறைந்தது மடடுமல்ல அத்தோடு பல மர்மங்களும் சேர்ந்த ஒரு வித்தியாசமான நிர்மான அமைப்பாகும்... எகிப்தியர்களின் இறந்த உடல்களை சில இரசாயணங்களை பயன்படுத்துவதன் மூலம் பதப்டபடுத்தி இந்த பிரமீடுகளில் அடக்கம் செய்யதுள்ளனர்.
எகிப்தில் காணப்படும் பல மர்மங்களுள் இந்த எகிப்தில் மம்மிகளும் தீராத மர்மமாகவே காணப்படுகிறது