ஸ்குவாஷ் உலகக் கோப்பை: வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது எகிப்து
ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டியில் தரவரிசையின் அடிப்படையில் முதலிடத்தில் உள்ள எகிப்து அணி இறுதிப் போட்டியில் மலேசியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
ஸ்குவாஷ் உலகக் கோப்பை
12 ஆண்டுகளுக்கு பின் தமிழ்நாட்டில் ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் கடந்த 13ம் திகதி ஆரம்பமாகியது.
இந்த போட்டியில் உலக அளவில் 8 அணிகள் பங்கேற்கும். 8 அணியிலும் இறுதி லீக் போட்டிகள் நிறைவடைந்து, இறுதி போட்டிக்கு எகிப்து அணியும் மலேசிய அணியும் முன்னேறியது.
மலேசியா அணி 3-0 என்ற கணக்கில் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதி போட்டி
நேற்றைய தினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் எகிப்து மற்றும் மலேசியா அணிகள் மோதின.
முதலில் விளையாடிய எகிப்து வீரர் அலி அபோ மற்றும் மலேசிய வீரர் டேரன் பிரகாசம் மோதி கொண்ட போட்டியில் 3-1 என்கின்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தார்.
அதன் பின் எகிப்து வீரரான அலி அபோ மலேசிய வீரர் டேரன் பிரகாசம் உடன் விளையாடி 3-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார்.
?? EGYPT ARE THE SQUASH WORLD CUP CHAMPIONS! ?
— World Squash (@WorldSquash) June 17, 2023
Result: SDAT WSF Squash World Cup Final
?? Egypt 2-1 Malaysia ??
Ayman 0-3 Yee
Eleinen 3-0 Pragasam
Aboelkheir 3-1 Azman
El Hammamy w/d Ong#squashworldcup pic.twitter.com/AVrtDcLHlq
இரண்டு அணிகளுமே சம புள்ளிகளுடன் இருந்த நிலையில் மூன்றாவது செட் தொடரப்பட்டது.
எகிப்தின் முன்னணி வீரர் அலி அபோ மலேசிய அணியின் டேரன் பிரகாசமுடன் 4-1 என்ற செட் கணக்கில் விளையாடி எகிப்து அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்து, மலேசிய அணியை வீழ்த்தி எகிப்து அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |