ஈபிள் கோபுரத்தில் ஒலிம்பிக் வளையங்கள்: நீதிமன்றம் செல்லும் ஈபிளின் குடும்பத்தினர்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, பாரீஸின் அடையாளமாகத் திகழும் ஈபிள் கோபுரத்தில் ஒலிம்பிக் வளையங்கள் பொருத்தப்பட்டன.
ஆனால், அது தொடர்பில், ஈபிள் கோபுரத்தை வடிவமைத்தவரின் குடும்பத்தினர் நீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளனர்.
ஈபிள் கோபுரத்தில் ஒலிம்பிக் வளையங்கள்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதைத் தொடர்ந்து, பாரீஸின் அடையாளமாகத் திகழும் ஈபிள் கோபுரத்தில் ஒலிம்பிக் போட்டிகளின் அடையாளமான ஒலிம்பிக் வளையங்கள் பொருத்தப்பட்டன.
Thibaud Moritz, AFP
பாரீஸ் நகர மேயரான Anne Hidalgo, அடுத்த ஒலிம்பிக் லாஸ் ஏஞ்சல்ஸில் துவங்கும் வரை, அதாவது, 2028ஆம் ஆண்டுவரை, அந்த வளையங்களை ஈபிள் கோபுரத்திலேயே பொருத்தியிருக்க முடிவு செய்துள்ளார்.
நீதிமன்றம் செல்லும் ஈபிளின் குடும்பத்தினர்
ஆனால், ஈபிள் கோபுரத்தை வடிவமைத்தவரான Gustave Eiffelஇன் குடும்பத்தினர், ஒலிம்பிக் வளையங்களை 2028ஆம் ஆண்டுவரை ஈபிள் கோபுரத்தில் பொருத்தி வைத்திருக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்ட இந்த ஆண்டு, அதாவது, 2024ஆம் ஆண்டு இறுதிவரை மட்டுமே அந்த வளையங்களை பொருத்திவைத்திருக்கலாம், அதற்கு மேல் அவற்றை அகற்றிவிடவேண்டும் என அவர்கள் கோரியுள்ளார்கள்.
ஈபிள் கோபுரம் என்னும் நினைவுச்சின்னத்தின் வடிவத்தையே, ஒலிம்பிக் வளையங்கள் மாற்றுவதாக அமைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அது தொடர்பில் நீதிமன்றத்தை அணுகவும் Gustave Eiffelஇன் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |