உக்ரைன் மக்களுக்காக ஒளிர்ந்த பாரிஸ் நகரம்
போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஈபிள் கோபுரம் நீல, மஞ்சள் நிறத்தில் ஒளிர வைக்கப்பட்டது.
ரஷ்ய தொடுத்துள்ள போரினால் உக்ரைன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக உக்ரைனின் பல பகுதிகளில் கடுமையான தாக்குதலை ரஷ்யா முன்னெடுத்து வருகிறது.
இதனால், உக்ரைன் நாட்டின் பல்வேறு நகரங்கள் உருக்குலைந்துள்ளன. இந்த நிலையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் கோபுரம் நீலம் மற்றும் மஞ்சள் வண்ண மின் விளக்குளால் ஒளிர வைக்கப்பட்டது.
உக்ரைன் நாட்டின் தேசியக்கொடியை பிரதிபலிக்கும் வகையில் இந்த நிறங்களில் ஒளிர வைக்கப்பட்டது. இதன் மூலம் உக்ரைன் மக்களுக்கு பிரான்ஸ் உறுதுணையாக இருப்பதாக தெரிவித்துள்ளது.