ஈபிள் கோபுரம் இடிக்கப்படப்போவதாக சமூக ஊடகங்களில் உலாவரும் தகவல்
2026இல் ஈபிள் கோபுரம் இடிக்கப்படப்போவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிவருகின்றன.
ஈபிள் கோபுரம் இடிக்கப்படப்போவதாக செய்தி
ஈபிள் கோபுர செய்தித்தொடர்பாளர் ஒருவர், ஈபிள் கோபுரம் நீண்ட காலம் பிரபலமாக இருந்தது. ஆனால், இப்போது யாரும் அதைப் பார்க்கவருவதில்லை. ஆகவே, அதை இடிக்கப்போகிறோம் என்று கூறியதாக Tapioca Times என்னும் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
2026இல் ஈபிள் கோபுரம் இடிக்கப்படப்போகிறது. ஆகவே, ஈபிள் கோபுரத்தைப் பார்க்கும் ஆசை இருந்தால் இப்போதே அதை வந்து பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த இணையதளத்தில் அந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களிலும் அந்த செய்தி பரவத் துவங்கியுள்ளது.
ஆனால், ஈபிள் கோபுரத்தை நிர்வகித்துவரும் Société d’Exploitation de la Tour Eiffel (SETE) என்னும் அமைப்போ, பாரீஸ் நகரமோ அல்லது பிரான்ஸ் கலாச்சாரத்துறை அதிகாரிகளோ ஈபிள் கோபுரம் இடிக்கப்படப்போவதாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
ஆகவே, சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளில் உண்மை இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
விடயம் என்னவென்றால், இம்மாதம், அதாவது, 2025ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 2ஆம் திகதி, ஈபிள் கோபுரம் மூடப்பட்டது. அதைத் தொடர்ந்துதான் இந்த வதந்திகள் வலுப்பெற்றுள்ளன.
உண்மையில், இடிக்கப்படுவதற்காக ஈபிள் கோபுரம் மூடப்படவில்லை, பிரான்ஸ் யூனியன்கள் நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால்தான் ஈபிள் கோபுரம் மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |