ஆசை ஆசையாக ஈபிள் கோபுரத்தைக் காணச் சென்ற சுற்றுலாப் பயணிகளுக்கு காத்திருந்த ஏமாற்றம்...
பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள ஈபிள் கோபுரத்தைக் காணச் சென்ற சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்ப நேர்ந்தது.
சுற்றுலாப் பயணிகளுக்கு காத்திருந்த ஏமாற்றம்...
நேற்று, திங்கட்கிழமை, ஆசை ஆசையாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள ஈபிள் கோபுரத்தைக் காணச் சென்ற சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்ப நேர்ந்தது.
வேலைநிறுத்தம் காரணமாக ஈபிள் கோபுரம் மூடப்பட்டுள்ளது. அதற்காக வருந்துகிறோம் என்னும் போர்டு ஒன்று சுற்றுலாப்பயணிகளை வரவேற்க, தூரத்தில் நின்று ஈபிள் கோபுரத்தைக் காண்பதற்காகவா வந்தோம் என மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்கள்.
Kiran Ridley / AFP
வேலைநிறுத்தம்
ஈபிள் கோபுரத்தை நிதி ரீதியாக நிர்வகிக்கும் வழிமுறை மேம்படுத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி அங்கு பணியாற்றும் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
உலகம் முழுவதிலுமிருந்து, ஆண்டுக்கு 7 மில்லியன் சுற்றுலாப்பயணிகளைக் கவர்ந்திழுக்கிறது ஈபிள் கோபுரம்.
அதுவும், ஒலிம்பிக் வேறு பாரீஸில் நடைபெற உள்ளதால், ஏராளம் சுற்றுலாப்பயணிகள் பாரீஸுக்கு வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், ஈபிள் கோபுர ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இப்படி அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது, இரண்டு மாதங்களில் இது இரண்டாவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |