எட்டுச் சிறார்கள்... கொடுஞ்செயலுக்கு காரணமான நபரை அடையாளம் கண்ட அதிகாரிகள்
லூசியானா மாகாணத்தின் ஷ்ரீவ்போர்ட்டில் ஞாயிற்றுக்கிழமை பகல் எட்டுச் சிறார்களைச் சுட்டுக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர், ஷாமர் எல்கின்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சுட்டுக் கொல்லப்பட்டார்
31 வயதான எல்கின்ஸ், ஷ்ரீவ்போர்ட்டில் உள்ள ஒரு குடியிருப்பில் ஏற்பட்ட குடும்பத் தகராறின்போது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார் என்பதை அப்பகுதி நபர் ஒருவர் உறுதி செய்துள்ளார்.

எட்டு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள எல்கின்ஸ் சம்பவயிடத்தில் இருந்து மாயமனதை அடுத்து, பொலிஸார் மேற்கொண்ட வாகனத் துரத்தலின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
எல்கின்ஸால் படுகொலை செய்யப்பட்ட 8 சிறார்களில் இளையவர் வெறும் 18 மாதக் குழந்தை என்றும் ஷ்ரீவ்போர்ட் காவல் துறை தெரிவித்துள்ளது.
மேலும் மரணமடைந்தவர்களில் எல்கின்ஸின் பிள்ளைகளும் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மொத்தம் 10 பேர் சுடப்பட்ட நிலையில், இந்தக் கொடூரமான தாக்குதலில் இரண்டு பெண்கள் உயிர் தப்பியுள்ளனர்.
அவர்களில் ஒருவர் எல்கின்ஸுடன் ஒருவித உறவில் இருப்பதாக அதிகாரிகள் நம்புகின்றனர். இந்தக் கொடூரமான சம்பவம் மூன்று வெவ்வேறு இடங்களில் அரங்கேறியுள்ளது.

வன்முறைக்குப் பெயர் பெற்ற
லின்வுட் அவென்யூவுக்கு அருகிலுள்ள மேற்கு 79வது தெருவின் முதல் 300வது தொகுதியில்தான், குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டனர். பின்னர் எல்கின்ஸ் அந்த இடத்தில் ஒரு கார் திருட்டை நிகழ்த்தி, அதிகாரிகளை அதிவேகமாகத் துரத்திச் செல்ல வைத்தார்.
லாங் ஏக்கர் டிரைவ் அருகே உள்ள பிராம்ப்டன் லேனில், அவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றே தெரிவித்துள்ளனர்.

நியூ ஆர்லியன்ஸிலிருந்து சுமார் ஐந்து மணி நேரப் பயணத் தொலைவில் உள்ள ஷ்ரீவ்போர்ட், வன்முறைக்குப் பெயர் பெற்ற, அதிக குற்றங்கள் நடக்கும் பகுதியாகும்.
லூசியானா மாகாணத்தில் 192 பேரில் ஒருவர் வன்முறைக் குற்றத்தால் பாதிக்கப்படுவதோடு ஒப்பிடுகையில், ஷிரெவ்ஸ்போர்ட்டில் 82 பேரில் ஒருவர் வன்முறைக் குற்றத்தால் பாதிக்கப்படுகிறார் என்றே ஆய்வுகளில் தெரிய வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |