பிரித்தானியாவில் புதிய போக்குவரத்து விதிமுறைகள்: இன்று முதல் அமல்படுத்தப்படும் என அறிவிப்பு
பிரித்தானியாவில் வாகன ஒட்டிகளுக்கான புதிய 08 விதிமுறைகளை பிரித்தானிய அரசாங்கம் மார்ச் 01 திகதி முதல் அமல்படுத்த போவதாக தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் புதிய மற்றும் கூடுதல் தூய்மை காற்று பகுதிகள், வாகன கலால் வரி அதிகரிப்பு, வாகன பதிவு எண்களில் மாற்றம் என 08 புதிய விதிமுறைகளை வரும் மார்ச் 01 திகதி அமல்படுத்த போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1. தொலைப்பேசி பயன்படுத்த தடை
வாகனங்கள் ஓட்டும் போது தொலைபேசிகள் பயன்படுத்துவது பிரித்தானியாவில் முன்பே சட்டவிரோத செயலாக கருதப்பட்ட நிலையில், இது தொடர்பான புதிய சட்டத்தையும் பிரித்தானிய அரசாங்கம் அறிமுகப்படுத்தி, வரும் மார்ச் 25 முதல் இந்த சட்டம் அமலில் கொண்டு வரப்படுகிறது என தெரிவித்துள்ளது.
இந்த சட்டத்தின் படி வாகன ஓட்டிகள், வாகனத்தை இயக்கிக்கொண்டு இருக்கும் போது தொலைப்பேசி பேசுதல், குறுஞ்செய்திகள் அனுப்புதல், புகைப்படம் அல்லது வீடியோ பதிவு செய்தல் மற்றும் இசை வரிசைகளை மாற்றுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவை குற்றங்களாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற தவறுகளில் பிடிப்படும் வாகன ஓட்டிகளிடம் இருந்து 200 பவுண்ட் அபராதமும், ஓட்டுநர் உரிமத்தில் ஆறு எச்சரிக்கை புள்ளிகள் சேர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. புதிய வாகன எண்கள்
பிரித்தானியாவில் வரும் மார்ச் 1 திகதி முதல் புதிய வாகன எண்களில் மாற்றம் கொண்டுவரப்படும் எனவும், இந்த வாகன எண் மாற்றமானது மார்ச் மற்றும் செப்டெம்பர் என வருடத்திற்கு இருமுறை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் மார்ச் 01 திகதி முதல் பதிவு செய்யப்படும் வாகனங்களின் எண் வரிசை 22 எனவும் அது செப்டெம்பர் மாதம் முதல் 72 எனவும் மாற்றமடையும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.
3. வாகன கலால் வரி அதிகரிப்பு
பிரித்தானியாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தால் வாகனங்களின் கலால் வரி அதிகரிக்க பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரிவிகிதமானது பயனர்களின் கார் அமைப்பு மற்றும் சுற்றுசூழலுக்கு எத்தகையது என்பதை பொறுத்து வேறுபாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. சிகப்பு டீசல் மற்றும் உயிரி எரிபொருள்களுக்கு கட்டுப்பாடு
மார்ச் 01 முதல் சிவப்பு டீசல் மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட உயிரி எரிபொருட்களின் சட்டப்பூர்வமான பயன்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது.
2050 ஆண்டுக்கான பிரித்தானியாவின் பருவநிலை இலக்குகளின் ஒருபகுதியாக நிலையான எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பது போன்ற நடைமுறைகள் இதனால் வெற்றி அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. புதிய கட்டிடங்களில் கட்டாய EV சார்ஜர்கள்
மின்சார வாகனங்களின் பயன்பாட்டை உற்சாகப்படுத்தும் நோக்கில், பிரித்தானியாவில் இனி கட்டப்படும் அனைத்து வணிக மற்றும் தனியார் கட்டிடங்கள் அனைத்திலும் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் EV சார்ஜர்கள் பொருத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6. அனைத்து புதிய கார்களிலும் வேக கட்டுப்பாடு கருவி
பிரித்தானியாவில் வரும் ஜூலை 06 திகதி முதல் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், புதிதாக சந்தை படுத்தப்படும் அனைத்து கார் மாதிரிகளிலும் Intelligent Speed Assistance (black box) எனப்படும் வேக கட்டுப்பாடு கருவி பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
7. புதிய தூய்மை காற்று பகுதிகள் அறிமுகம்
பிரித்தானியாவில் கடைபிடிக்க பட்டுவரும் தூய்மை காற்று மண்டலம் திட்டத்தில் மேலும் Greater Manchester மற்றும் Bradford என்ற இரண்டு பகுதிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.
8. Kind rates அதிகரிப்பு
பிரித்தானியாவில் வழங்கப்படும் Kind rates பயனீட்டு சலுகையில் ஒரு சதவீதம் அதிகரிப்பு.