எல் சால்வடார் கால் பந்தாட்ட மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்: 9 பேர் உயிரிழப்பு
கஸ்கட்லானிலுள்ள நினைவு சின்ன மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது, ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிமியர் லிக் காலிறுதி போட்டி
எல் சல்வடோர் நாட்டின் தலைநகரான சான் சால்வடாரிலிருந்து, வடகிழக்கே 25 மைல் தொலைவிலுள்ள கஸ்கட்லானின் அருகே உள்ள மைதானத்தில், கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.
@ap
அந்நாட்டில் நடைபெற்று வரும் கால்பந்தாட்ட போட்டியில், பிரீமியர் பிரிவின் காலிறுதியில் அலியான்சா மற்றும் எஃஏஎஸ் ஆகிய கிளப்புகளுக்கு, இடையேயான கால்பந்து போட்டி மைதானத்தில் நடந்துள்ளது.
@ap
இதில் கூட்ட நெரிசலினால் ரசிகர்களிடையே ஏற்பட்ட தள்ளு முள்ளு காரணமாக, நுழைவு வாயிலில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது.
9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
இந்நிலையில் அந்த கூட்ட நெரிசலில் சிக்கி, ரசிகர்களில் ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் நிறைய பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் இறந்தவர்களின் ஏழு பேர் ஆண்கள் மற்றும் இருவர் பெண்கள் எனவும், மீட்புப் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
@ap
மைதானத்தின் நுழைவு வாயிலில் ஏற்பட்ட நெரிசலில் ரசிகர்கள் சரிந்து விழுந்ததாகவும், அதில் சிலர் நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறலில் உயிரிழந்திருக்கலாம் எனவும் மீட்பு குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சிலர் சுரங்கப் பாதைகளின் உலோகத்தின் கீழ் சிக்கி உயிரிழந்திருக்கலாம் எனவும், அவர்களது உடல்கள் அங்கிருந்து மீட்கப்பட்டது எனவும் மீட்பு பணியினர் கூறியுள்ளனர்.