ஈழத்து பெண் சுவிஸில் மருத்துவர்; பாராட்டுகளை அள்ளி தெறிக்கும் நெட்டிசன்கள்
தனது 16 வயதில் முள்ளிவாய்க்கால் பிரச்சினையில் தனது சொந்த நாட்டை விட்டு வெளியேறி சுவிஸ் நாட்டுக்கு புலம்பெயர்ந்த தமிழிசை என்றவரே இந்த சாதனையை படைத்துள்ளார்.
இலங்கையில் அவரது வாழ்க்கை,
திரு திருமதி கலைச்செழியன் வனஜா தம்பதிகளின் புதல்வி தான் இந்த தமிழிசை.
2009 இல் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் நிறைவுக்கு வந்த நிலையில், தனது கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தை கொக்குவில் இந்துக்கல்லூரியில் படித்து 8A என்ற சித்தியை பெற்று சாதனைப்படைத்துள்ளார்.
இந்த பரீட்சையானது 16 வயதில் தான் செய்ய வேண்டும். இதில் சித்திப்பெற்ற உடனே இவர் தனது 16 வயதில் சுவிஸ் நாட்டுக்கு புலம்பெயர்ந்துள்ளார்.
சுவிஸில் தமிழிசையின் பயணம்
சுமார் ஒரு வருடம் மொழி படித்துக்கொண்டிருந்தபோது அவளது மொழியாற்றலை உணர்ந்த (Gymnasium) கல்வி நிர்வாகம் அனுமதியை வழங்கியதும் தனது கல்வியை மீண்டும் தொடர்ந்தார்.
06 மாத காலம் ஆசிரியர்துறையை தேர்ந்தெடுத்து கற்றுக்கொண்டிருந்தபோது. தனது சிறுவயது ஆசையாக இருந்த வைத்தியதுறையில் சாதிக்க வேண்டும் என்ற முயற்சியை கைவிடவில்லை.
தற்போது Basel பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடத்தை நிறைவு செய்து இரண்டாம் வருடத்தில் படித்து வருகின்றாள்.
இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.