நாவூறும் சுவையில் இளநீர் ரசம்.., இலகுவாக செய்வது எப்படி?
மதிய வேளையில் உண்ணும் உணவுகள் ஜீரணம் ஆவதற்கு ரசம் பெரிதும் உதவுகிறது.
பருப்பு ரசம், தக்காளி ரசம், லெமன் ரசம் என்று ரசத்தில் பல வகைகள் உள்ளன.
அந்தவகையில், தற்போது சுவையான இளநீர் ரசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பூண்டு- 5 பல்
- காய்ந்தமிளகாய்- 2
- மிளகு- ½ ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- தக்காளி- 1
- உப்பு- தேவையான அளவு
- புளி- எலுமிச்சை அளவு
- நெய்- 1 ஸ்பூன்
- கடுகு- ½ ஸ்பூன்
- உளுந்து- ½ ஸ்பூன்
- பச்சைமிளகாய்- 1
- கறிவேப்பிலை- 1 கொத்து
- மஞ்சள் தூள்- சிறிதளவு
- இளநீர்- 1
- கொத்தமல்லி- சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு, காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு, தக்காளி சேர்த்து அரைத்துகொள்ளவும்.
பின் அடுப்பில் வாணல் வைத்து அதில் நெய் சேர்த்து சூடானதும் அதில் கடுகு, உளுந்து, பூண்டு, காய்ந்தமிளகாய், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து தாளிக்கவும்.
அடுத்து இதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து தொடர்ந்து அரைத்த கலவை சேர்த்து வதக்கவும்.
இதற்கடுத்து இதில் புளி கரைத்த தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
பின்னர் இதில் இளநீரின் சதை மற்றும் இளநீர் தண்ணீரை சேர்த்து கலந்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான இளநீர் ரசம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |