பீட்சாவால் வந்த சண்டை... மனைவியை சுட்டுக்கொன்ற சுவிஸ் நாட்டவர்
சுவிஸ் நாட்டவர் ஒருவர் பீட்சாவால் வந்த சண்டையில் மனைவியை சுட்டுக்கொன்றுள்ளார்.
பீட்சாவால் வந்த சண்டை...
சுவிட்சர்லாந்தின் Nidwalden மாகாணத்தில், பீட்சா தொடர்பாக ஒரு வயது முதிர்ந்த தம்பதியரிடையே சண்டை வந்துள்ளது. அந்த 80 வயதுக் கணவர், தன் மனைவி கொடுத்த பீட்சாவை தான் சாப்பிடாததால், தன் மனைவிக்கு கோபம் வந்ததாகவும், தன்னை அவமதிக்கும் விதத்தில் அவர் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.
தனக்கு வந்த கோபத்தில், தான் தனது துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டதாக அவர் தெரிவித்துள்ளார். துப்பாக்கியால் சுடப்பட்ட அந்த பெண், சிறிது நேரத்தில் உயிரிழந்துவிட்டார்.
சந்தேகம் எழுப்பியுள்ள அதிகாரிகள்
உடற்கூறு ஆய்வில், அந்த பெண் உடலில் ஆல்கஹால் இருந்தது தெரியவந்துள்ளது. அவருடன் தானும் மது அருந்தியதாக அவரது கணவரும் ஒப்புக்கொண்டுள்ளார்.
மனைவியை சுட்டுவிட்டு, உடனடியாக அந்த நபர் பொலிசாரை அழைத்துள்ளார். அது தற்செயலாக நடந்த விபத்து என அவர் கூறியுள்ள நிலையில், அதிகாரிகளோ, தாங்கள் அந்த வீட்டுக்குச் செல்லும்போது, துப்பாக்கியால் சுட்ட அந்த நபர் ஜாலி மூடில் இருந்ததாகவும், அதனால், அவர் வேண்டுமென்றேதான் தன் மனைவியை சுட்டுக்கொன்றிருப்பார் என தாங்கள் கருதுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பொலிசார் தொடர்ந்து அவரை விசாரணைக்குட்படுத்தி வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |