மகளிர் உரிமைத் தொகை வராததால் குவிந்த முதியவர்கள்! ஒருமையில் திட்டிய ஊழியரின் வீடியோ
தமிழக மாவட்டம், தூத்துக்குடியில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்து வராத பெண்கள் தாலுகா அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மகளிர் உரிமைத்தொகை மேல்முறையீடு
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.
அந்தவகையில், இந்தத் திட்டத்துக்காக 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டது.
அதன்படி, 35 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதில், தகுதியுள்ள மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையே விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்ள https://kmut.tn.gov.in என்ற புதிய இணையதளம் ஒன்றை தமிழக அரசு தொடங்கியது.
மேலும், விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம் என அறிவித்திருந்தது.
ஒருமையில் திட்டிய ஊழியர்
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் மகளிர் உரிமைத்தொகை வராத ஏராளமான பெண்கள் ஒரே நேரத்தில் குவிந்தனர். அப்போது, அங்கு கூடியவர்களை சமாளிக்க முடியாமல் ஊழியர் ஒருவர் முதியவர்களை பார்த்து ஒருமையில் திட்டியுள்ளார்.
எருமை மாடுகளா ! அறிவு இல்லையா !!! கண்ணீர் விட்ட முதியவர்கள் - பெண்கள்
— தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) September 21, 2023
கோவில்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பத்தின் நிலை குறித்து கேட்க வந்த பெண்களுக்கு நடந்த அர்ச்சனை !!!
தாசில்தார் லெனின் முன்னிலையில் பேசிய சம்பவம் பலரையும் முகம் சுளிக்க வைத்தது. pic.twitter.com/V80sfno5WJ
தற்போது, இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |