திடீரென உயிரிழந்த சிறுவன்... சூனியம் செய்ததாகக் கூறி பெண்ணைக் கொலை செய்த உறவினர்கள்
பீஹார் மாநிலத்தில் சிறுவன் ஒருவன் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழக்க, பெண்ணொருவர் சூனியம் செய்ததால்தான் அவன் இறந்தான் எனக் கூறி அந்தப் பெண்ணை சரமாரியாகத் தாக்கி கொலை செய்துள்ளனர் அந்த சிறுவனின் உறவினர்கள்.
திடீரென உயிரிழந்த சிறுவன்
பீஹாரிலுள்ள Rohtas என்னுமிடத்தில், உபேந்திரா (Upendra Oraon) என்னும் நபரின் எட்டு வயது மகன் உடல் நலம் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்துவிட்டான்.
உடனே, அந்தச் சிறுவனின் தாத்தாவான விஷ்ணுதேவ் (Vishnudev Oraon) என்பவர், தங்கள் வீட்டின் அருகில் வசிக்கும் கிஸ்மதியா தேவி (Kismatiya Devi) என்னும் பெண் சூனியம் வைத்ததால்தான் சிறுவன் இறந்துவிட்டான் என்று குற்றம் சாட்ட, தேவி ஒரு சூனியக்காரி என்று கூறி அவரும் அவரது உறவினர்களும் தேவியை கடுமையாகத் தாக்கியுள்ளார்கள்.
கூர்மையான ஆயுதங்களால் அவரை அவர்கள் சரமாரியாகத் தாக்க, தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
தகவலறிந்து வந்த பொலிசார் விஷ்ணுதேவைக் கைது செய்துள்ளதுடன், உயிரிழந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பியுள்ளார்கள்.